தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போரட்டம் |ஊடக அறிக்கை!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போரட்டம் |ஊடக அறிக்கை!

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போரட்டம் 2025

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் 03.03.2025 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.`

இப் போராட்டமானது, சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடாத்திவரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிகோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்படவேண்டும் என்பதனை முன்வைத்தும்  ஐரோப்பாவாழ் தமிழ் மக்களின் ஒன்றிணைவுடன் உணர்வெழுச்சியோடு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில், இளைய தலைமுறையினரோடு உணர்வாளர்களும் மக்களும் என நூற்றுக்கணக்கானோர் இணைந்து தமிழீழத் தேசியக் கொடிகளையும் பதைகைகளையும் தாங்கியவாறு ஐ.நா வளாகம் அதிர கொட்டொலிகளை எழுப்பி, வேற்றினத்தவரின் அதிக கவனத்தையும் ஈர்த்துள்ளனர்

அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகைப்பேரொளிகளுக்கான திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அகவணக்கம் மற்றும் உறுதிமொழி இடம்பெற்றது. உறுதிமொழி நடைபெற்றபோது தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் உணர்வோடு பங்கெடுக்க, ஏனைய தமிழ் மக்கள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் படத்தையும் தமிழீழத் தேசியக்கொடியையும் கையில் ஏந்தியவாறு எழுச்சியுடன் உறுதிமொழி எடுத்தனர்.

சிறப்புரையினை   அனைத்துலகத் தொடர்பகப் நிர்வாக பொறுப்பாளர் திரு. தினேஷ் அவர்களால் ஆற்றபட்டதோடு, தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழிகளும் உரைகள் வழங்கபட்டான.

ஈகை பேரொளி முருகதாசன் திடல், உணர்வெளுச்சி பொங்கும் வண்ணம், பிரித்தானியா கலை பண்பட்டுக் குழுவின் தலைமையில் வருகை தந்த இளம் சிறுமிகள் நடனம் ஒன்றினை வழங்கினர்.

இறுதிநிகழ்வுகளாக பிரகடனம் வாசிக்கபட்டதனை தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உரமேற்றும் பாடல் இசைக்கபட்டு, அதன் பின்னர் தமிழீழ தேசியக்கொடி கையேற்றலுடன் இக் கவனையீர்ப்பு போராட்டமானது பேரெழுச்சியுடன் நிறைவுபெற்றது.

எங்கள் தாயகமாகிய தமிழீழதேசம் விடுதலை அடையும்வரை எத்தடைவரினும் அத்தடைதகர்த்து, மாவீரர்கள் காட்டிய பாதையில் அவர்கள் ஈகங்கள் வழிநின்று, தமிழீழத்  தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தொடர்ந்தும் போராடுவோமென அறிவிப்பாளர்களின் உணர்வின் வரிகளோடு உறுதியெடுத்து தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உரத்த பேரொலியோடு இப் போராட்டம் நிறைவுபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பில்  தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாபெரும் போராட்டமானது, இனவெறி சிறிலங்கா அரசிற்கும் சர்வதேசத்திற்கும் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கும் ஒரு செய்தியை சொல்லிநிற்பதோடு, தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்போராட்டம் உணர்வோடு கொண்டு செல்லப்படும் என்பதை கட்டியம் கூறிநிற்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போரட்டம் |ஊடக அறிக்கை! 1
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போரட்டம் |ஊடக அறிக்கை! 2
பகிர்ந்துகொள்ள

Leave a Reply