தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி – 2025 மே 14, யாழ் நல்லூரிலிருந்து புறப்பட்டது
வட தமிழீழம் , யாழ்ப்பாணம், மே 14, 2025 –
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி” இன்று (14.05.2025) யாழ் நல்லூரிலிருந்து ஆரம்பமாகியது.
2009 ஆம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசினால் முன்னெடுக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை நினைவுகூர்தல் மட்டுமல்லாமல், நீதி கோரியும் நடத்தப்படுகிறது. இந்த ஊர்திப் பவனியில் பல துறை சார்ந்த மக்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, தமிழினத்துக்கான நீதி இன்னும் கிடைக்காததையும் வலியுறுத்தினர்.
குறித்த ஊர்திப் பவனி வடமராட்சிப் பகுதியில் பயணித்துகொண்டுள்ளது





