தமிழீழத்தின் அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு பின்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஜனாதிபதி வேட்பாளருமான பெக்கா ஹாவிஸ்டோவை பின்லாந்து நாடாளுமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பில் சந்திப்பு ஒன்றை 17.10.23 நேற்று மேற்கொண்டது
புதிதாக முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் சமூக ஊடகச் சட்டம் தொடர்பான கவலைகள் உட்பட தமிழர்களின் தற்போதைய கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான பரந்த அளவிலான பிரச்சினைகளை நாங்கள் எழுப்பினோம்.
பேரினவாத சிங்கள அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைத்த தமிழின அழிப்புக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பில் பின்லாந்து செய்ய வேண்டியதை தமிழீழத்தின் அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது