தமிழில் தேசிய கீதம் என்ற பேச்சிற்கே இடமில்லை!

  • Post author:
You are currently viewing தமிழில் தேசிய கீதம் என்ற பேச்சிற்கே இடமில்லை!

இலங்கையின் 72 வது சுதந்திர தின கொண்டாட்டம் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம், நேற்று அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நேற்று நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் தேசிய கீதம் பாடும் முடிவு எடுக்கப்பட்டது.

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது.

அனைத்து அமைச்சுக்கள், கொழும்பு மாநகரசபை மற்றும் முப்படையின் பங்களிப்புடன் சுதந்திரதின நிகழ்வை நடத்த கோட்டாபய விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சுதந்திரதினத்தை ஒட்டி மரம் நடும் திட்டத்தையும் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசு பதவியேற்றதன் பின்னர், 2016 ஆம் ஆண்டில் காலி முகத்திடலில் நடைபெற்ற 68 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள