தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனேடிய பிரதமர்!

You are currently viewing தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனேடிய பிரதமர்!

தமிழர்களின் திருநாளான தை பொங்கல் திருநாளை கொண்டாடும் கனேடிய தமிழ் மக்கள் மற்றும் உலக தமிழ் மக்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தை மாதத்தின் முதல் நாளை உலக தமிழர்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த தை பொங்கல் திருநாளன்று, ஆண்டு முழுவதும் உழைத்த உழவர்களுக்கு மரியாதை செய்யப்படுவதுடன், வரவிருக்கும் புதிய நாட்களை எதிர்கொள்வதற்கான புது நம்பிக்கையையும் இந்த தை பொங்கல் திருநாள் அனைவர் மத்தியிலும் வைக்கிறது.

கனடாவில் தமிழ் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் நிலையில், அவர்களுக்கான சிறப்பான நாளான தை பொங்கல் திருநாளன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அனைவருக்கும் வணக்கம்” என்று தொடங்கும் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, இன்று தைப் பொங்கல் திருநாளை கொண்டாடும் நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது உழவர்கள் திருநாள் என்றும் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த நான்கு நாட்கள் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தை பொங்கல் திருநாள் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் இணைந்து கொண்டாடவும், பொங்கலை பகிர்ந்து கொள்ளவும் வித்திடுகிறது என தெரிவித்த பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, தமிழில் அனைவருக்கும் “இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்” தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply