தமிழீழக் கோட்பாடு என்பது ஒரு உயிருள்ள தேச விடுதலைச் சித்தாந்தம்!!

You are currently viewing தமிழீழக் கோட்பாடு என்பது ஒரு உயிருள்ள தேச விடுதலைச் சித்தாந்தம்!!

தமிழீழக் கோட்பாடு என்பது ஒரு உயிருள்ள தேச விடுதலைச் சித்தாந்தம். அது வல்லவர்களைக் கொண்டாடும்,துரோகிகளை நிரந்தரமாகவே தூய்மைப் படுத்தும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற அரசியல் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்ட களத்திலிருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம்.

அப்படித் தெரியாதவர்கள்,சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஏன் வேறு தெரிவுகளின்றி அகற்றப்பட்டார்கள் என்பதை இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாட்டிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அந்த வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு மிகச் சுருக்கமாக விளக்க முயற்சிக்கிறோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம்

‘தனித் தமிழீழமே இறுதித் தீர்வு’ என்று தமிழீழத் தமிழர்கள் ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். அதை ஒரு சனநாயகத் தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.
அதுதான் 1976 இல் நிறைவேற்றப்பட்ட ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ (வட்டுக்கோட்டைப் பிரகடனம்) ஆகும்.

இந்த வட்டுக்கோட்டைப் பிரகடனம், இலங்கைத் தீவில் தமிழீழத் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, தமிழீழ நாட்டை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.

இந்த ‘வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை’ அடிப்படையாக வைத்தே தமிழர் விடுதலை கூட்டணி 1977 இல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவினை வழங்கித் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பெரும் வெற்றி பெற வைத்தார்கள்.

அதனாலேயே 1977 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் வழங்கிய இந்தத் தீர்ப்பு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாக கொண்ட தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

தமிழீழத்திற்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபை

விடுதலை தேடிய மக்களின் ஆணையினால் சிறிலங்கா பாராளுமன்றத்திற்கு எதிர்கட்சியாகச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை அரசு முன்வைத்த மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக் கொண்டது.

இதே 70 களில் மிகச் சில ஆளணி எண்ணிக்கையைக் கொண்ட ஆயுதப்போராட்ட இயக்கங்களும் தோன்றியிருந்தன.
ஆனால் அவ் இயக்கங்களிற்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே தொடர்புகள் இருந்தது.

எந்தக் கணத்தில் மக்களின் தமிழீழத்திற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு அதற்கான விடுதலை அரசியல் முனைப்புகளைச் செயற்படுத்தாமல், மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழர்களுக்கான தீர்வாக தமிழர் விடுதலை கூட்டணி ஒப்புக்கொண்டதோ, அத்தோடு இயக்கங்கள் அவர்களைத் துரோகிகளாகவே பார்க்க ஆரம்பித்தன.

அந்தக் கணத்திலிருந்து மக்களை தமிழீழம் நோக்கி அணிதிரட்டி,வழி நடத்துவதற்கான பொறுப்பை இயக்கங்கள் எடுத்துக் கொண்டன.

தமது அரசியல் பதவிகள், பொருளாதார சுயலாபங்களுக்காக, அரசியல் இருப்புகளுக்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகவைக்க முயன்றார்கள்.

அவ்வாறு முயன்றவர்களுக்கு துரோக நடவடிக்கைகளை ‘நிறுத்தும்படி ‘ முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்தும் துரோகம் செய்ய முயன்றவர்கள் பின்னர் இயக்கங்களால் அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

இந்தியாவின் இரு முனை அணுகுமுறை

இலங்கையில் இந்தியாவின் தலையீடு என்பது அதனது பிராந்திய, பூகோள நலன்களை அடிப்படையாகக் கொண்டது.

இந்திய அரசு தமிழீழத் தமிழர்களை கையாண்ட அணுகுமுறை என்பது இரு முனையிலானது.

இலங்கை அரசை இந்தியாவின் பிடிக்குள் கொண்டுவர ஆயுதப்போராட்ட இயக்கங்கள் தேவைப்பட்டன. காரணம் போராளி இயக்கங்களின் இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே இலங்கை அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கக் கூடியவை.

அந்த அழுத்தத்திற்குப் பணிந்து இலங்கை அரசு இந்தியாவிடம் சரணாகதி அடையும்போது, தனக்குத் தோதான தீர்வுத் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தும்.

ஆனால் அந்த தீர்வுத் திட்டத்தை போராளி இயக்கங்களினூடாக நடைமுறைப் படுத்துவது கடினம்.
காரணம் இயக்கங்கள் எளிதில் சமரசத்திற்கு உள்ளாக மாட்டாது. குறிப்பாகத் தமிழீழ விடுதலைப்புலிகளையும், தலைவர் பிரபாகரனையும், தமிழீழத்தைத் தவிர்த்து எந்தத் தீர்வுத் திட்டத்திலும் சமரசம் செய்யவே முடியாது. இது இந்தியாவிற்கு நன்கு தெரியும்.

எனவே அதற்கு இருக்கவே இருக்கிறார்கள் பதவியை இறுக்கிப் பிடித்து கொள்ளும் சில தமிழ் அரசியல்வாதிகள்.

அதனால் தீர்வு திட்டங்களிற்கான பேச்சுவார்த்தைகளில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியை இந்திய,இலங்கை அரசுகள் பயன்படுத்தின.

தமது சுய லாபங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழித்தோன்றல்கள் இந்தியாவின் நலனை முன்னிறுத்தவும், தமிழீழக் கோட்பாடுகளை அழிப்பதற்கும் தயாராக இருப்பதை இன்றைக்கும் கூட நீங்கள் காணலாம்.

இந்தியாவின் இந்த இரட்டை அணுகுமுறையை உடைப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர் நகர்வுகளைச் செய்தார்கள். தமிழீழக் கோட்பாட்டிற்கு முரணாக செயற்படக்கூடாது என்ற எச்சரிக்கை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கொடுக்கப்பட்டது.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படையினரின் படையெடுப்பின் பின்னர் தமிழீழப் போராட்ட களத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற அரசியல் தலைவர்களோ ‘ தமிழீழப் போராட்டம் எக்கேடு கெட்டாலும் தங்களது அரசியல் பதவி வாழ்க்கையை உயிர்ப்பிக்க வேண்டிய’ அவாவுடன் இருந்தார்கள்.

இதற்கான வேலைத்திட்டமாக இந்தியப்படைகள் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் , வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அமிர்தலிங்கம் தலைவராக இருக்கும் தமிழர் விடுதலை கூட்டணியே என்ற விம்பத்தைக் ‘ கட்டமைக்க முயன்றனர்.

இந்த வியூகம் ஒன்றும் புதுமையானது அல்ல. உரிமைப் போராட்டம் நடக்கும் தேசங்களிலெல்லாம் இது நடந்திருக்கிறது. யார் உண்மையான, நேர்மையான , பலமான போராட்ட சக்தியாக உள்ளனரோ அவர்களை அழித்துவிடுவதற்கு ‘டம்மிப் பீசுகளை இனத்தின் ‘ ஏக பிரதிநிதிகளாக கட்டமைக்கும் யுக்தியை காலாதிகாலமாக ஏகாதிபத்திய அரசுகள் கையாண்டிருக்கின்றன.

இந்தியாவின் சதிவலைக்குள் சிக்க வேண்டாமென அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற தேர்தல் அரசியல் தலைவர்களுக்கு பலதடவை எச்சரிக்கை செய்யப்பட்டது.
அதையும் மீறி அவர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டு தமிழீழ மக்களின் ஆணையைப் புறந்தள்ளிச் செயற்பட்டனர். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ‘தடைக்கல்லாக’ கருதி அவர்களை நிரந்தரமாகவே களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழீழக் கோட்பாடு என்பது ஒரு தேசவிடுதலைச் சித்தாந்தம் அது வல்லவர்களைக் கொண்டாடும்,துரோகிகளை நிரந்தரமாகத் தூய்மைப் படுத்தும்.

-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-

பகிர்ந்துகொள்ள

Leave a Reply