தமிழீழத் தாயகத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நாள்!

You are currently viewing தமிழீழத் தாயகத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நாள்!

தமிழீழத் தாயகத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நாள் இன்றாகும் – (24.03.1990 -24.03.2022)

விடுதலைப் புலிகளிடம் பிடிபட்ட 18 இந்திய இராணுவம்.“போர்க்கைதிகாளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 18 இந்திய இராணுவ வீரர்களைக் கட்டி அவர்கள் உடலில் டயர்களைப் போட்டு உயிரோடு புலிகள் கொளுத்திவிட்டார்கள்” என இந்திய அரசு திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தது.

புலிகள் கொடூரமானவர்கள் என்று சித்தரிப்பதில் வானொலியும் தொலைக்காட்சியும் முன்னின்றன.ஆனால் நடந்தது என்ன? இந்தியாவின் பொய்முகத்தை விடுதலைப்புலிகள் அம்பலப்படுத்தினார்கள்.1987 ம் ஆண்டு நவம்பர் மாதம் உலகப்பத்திரிகையாளர் முன்னிலையில் 18 இந்திய இராணுவத்தையும் விடுதலைப்புலிகள் விடுவித்தனர்.இந்தியப்படையின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகள் புகுந்தது எப்படி என்பது தெரியாமல் இந்திய அதிகாரிகள் திகைத்தனர்.விடுவிக்கப்பட்ட இந்திய இராணுவ வீரர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்கவேண்டாமென இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் கூறினார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் குறுக்கிட்டு “நாங்கள் இவர்களை சித்திரவதை செய்தோமா? என்று கேளுங்கள்”எனக்கூறினார்கள்.கைது செய்யப்பட்டவர்களுள் ஒரு இந்திய இராணுவ வீரரான வாமன்சிட்டி “அப்படியொன்றும் நடக்கவில்லை.நாங்கள் மிக நன்றாகவே நடத்தப்பட்டோம்”என்று கூறினார்.இந்திய இராணுவ அட்டூழியங்கள் பற்றிய சில புகைப்படங்களை விடுதலைப்புலிகள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்று,வந்ததைப்போலவே மாயமாக மறைந்துவிட்டனர்.
விடுதலைப்புலிகள் மறைந்ததும் இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளர்களை மிரட்டினார்கள் “புகைப்படங்களை எங்களிடம் திரும்பத் தந்துவிடுங்கள்.இல்லையென்றால் இன்னொருமுறை இலங்கைவர உங்களை அனுமதிக்கமாட்டோம்”என்றார்கள்.வேறு வழியில்லாமல் பத்திரிகையாளர்கள் அந்தப்படங்களைத் திருப்பிக்கொடுத்தார்கள்.தங்கள் மக்களைக் கொன்றுகுவித்த ஆக்கிரமிப்பு படையைச்சேர்ந்த வீரர்கள் தம்மிடம் பிடிபட்டபொழுது போர்க்கைதிகளைக்குரிய மரியாதையுடன் அவர்களைப் புலிகள் நடத்தி தமிழர் தம் பண்பாட்டினை நிலைநிறுத்திக் காட்டினார்கள்.ஆனால் இந்தியப்படையோ தூதுவனாகச் சென்ற புலிவீரனை நயவஞ்சகமாகப் படுகொலை செய்தது ஆறாத வடுவாக தமிழர் வரலாற்றில் பதிந்துகொண்டது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply