தமிழீழத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்த நாள் 19.03.1988.
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்தவர் நாட்டுப்பற்றாளர் தியாக சுடர் அன்னை பூபதி அம்மா ஆவார். எம் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பாரதம் அன்றும் இன்றும் ஏளனமாகவே பார்த்தது அது எத்தனையோ உயிர்களையும் பறித்தது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி.
அமைதிப்படை என்ற போர்வையில் தமிழீழ மண்ணில் கால் பதித்து, தமிழின அழிப்போரை நிகழ்த்தி தமிழர்களை ஏதிலிகளாக்கி படைகொலை செய்து அராஜகம் நிகழ்த்தியது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அன்னை பூபதி அவர்கள்,அறப்போரில் இறங்க தன்னுரை அர்ப்பணித்து 37 ஆம் ஆண்டு நிறைவாகும்.