தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் “தமிழீழ விடுதலைப்புலிகள் என பெயர் சூட்டப்பட்ட நாள் 05.05.1976”
தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பேரியக்கத்தின் பலத்தோடு, தமிழினம் தலை நிமிர்ந்த நாள் இன்றாகும். தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கம் பெற்று 48 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த காலங்களில் புலிகள் இயக்கம் எதிரிகளினதும் துரோகிகளினதும் பல சவால்களை முறியடித்து வெற்றிநடை போட்டது. தமிழினத்திற்கு பல பெருமைகளையும் சேர்த்தது. நினைத்துப்பார்க்க முடியாத அளவில் மாவீரர்கள் தங்களுடைய வீரத்தியாகத்தை தாய்நாட்டிற்காக செய்தனர். தேசியத்தலைவரின் மதிநுட்பம் மிக்க வழிநடாத்தலினால் தமிழீழ நடைமுறை அரசையே உருவாக்க முடிந்தது. தேசியத்தலைவரின் சிந்தனை செயல்வடிவம் பெறும்போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை எதிரிகளும் துரோகிகளும் நன்கறிவார்கள். தமிழர் நாமனைவரும் ஓரணியில் திரண்டு தேசியத்தலைவரின் சிந்தனையின் பெருந்துணை கொண்டு மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என இந்த புரட்சிகரமான நன்னாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக….