தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் ஒழுங்கமைப்பில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த சதுரங்க சுற்றுப்போட்டியும் இரண்டாவது தடவையாக கராத்தே சுற்றுப்போட்டியும் கடந்த 01.10.2023 அன்று சூரிச் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இரு போட்டிகளிலும் சுவிஸின் பல பாகங்களிலும் இருந்து பெரும் உற்சாகத்துடன் போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
கராத்தே சுற்றுப்போட்டியில் Japan Karatedo Itosu-kai Swiss கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு விபுலானந்தன் கௌரிதாசன் Shotokan karate School Bern கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்சே மன்மதன், Shotokai Karate Schule St.Gallen கராத்தே பள்ளியின் தலைமை ஆசிரியர் சென்சே சிறிவிஜயகுமார் ஆகியோரின் மாணவர்கள் போட்டியிட்டனர்.
.நிகழ்வினை விளையாட்டுத்துறையின் சார்பில் திரு சென்சே சப்தேஸ் கௌரிதாசன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.நடுவர்களாக ஜப்பான் Japan Karatedo Itosu-kai Swiss கிளையின் அங்கீகாரம் பெற்ற நடுவர்கள் பணிபுரிந்தனர்.
விளையாட்டுத்துறை – சுவிஸ் கிளை