தமிழீழம் அமைக்க உதவுகிறோம் என்னும் தலைப்பில் துரோகிகளாகவும் மாற்றப்படலாம்.

You are currently viewing தமிழீழம் அமைக்க உதவுகிறோம் என்னும் தலைப்பில் துரோகிகளாகவும் மாற்றப்படலாம்.

தமிழீழம் அமைக்க உதவுகிறோம் என்னும் தலைப்பில் துரோகிகளாகவும் மாற்றப்படலாம். அது அவர்களின் வேலை ஆனால் நாங்கள் மேதகு பிரபாகரன் பிள்ளைகள் நாங்கள் நாங்களாகவே இருக்க வேண்டும் . விழிப்பே விடுதலையின் முதற்படி வரலாற்றைப்படி வரலாற்றைப்படை….. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையா றோவின் கையாள் என்கிறது புதிய ஆங்கில நூல்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரதிதலைவர் கோபாலசாமி மகேந்திரராசா இந்தியாவின் உளவு அமைப்பான ‘றோ’ வின் கையாளாகச் செயற்பட்டவர் என முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்படுவதற்கு சற்றுமுன்னர் அவரைப் பேட்டி கண்ட நீனா கோபால் எழுதியுள்ள புதியநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தையாவை ‘ றோ’ தனது கைக்கூலியாக உருவாக்கி வளர்த்தது. எவராலும் ஊடுருவ முடியாத தலைவர் பிரபாகரனின் உள்வட்டத்திற்குள் ஊருடுவதற்கு மாத்தயாவை பயன்படுத்தியது என அவர் ராஜீவ்காந்தியின் படுகொலை என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ரோவிற்கு மிகவும் பயனுள்ளவராக மாறினார். மண்டையைக் கழுவி மாற்றப்பட்டார் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் இருந்தபடியே அதற்கு துரோகமிழைத்து பாதிப்பை ஏற்படுத்துபவராக மாறினார்.விடுதலைப்புலிகளின் தலைவரை கொலைசெய்துவிட்டு அந்த அமைப்பின் தலைமையைக் கைப்பற்றுவதே அவரிற்கு வழங்கப்பட்டிருந்த பணி எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பின்னர் மாத்தையா, இந்தியாவின் உளவாளி என்பதை கண்டுபிடித்த விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை அவரைக் கைது செய்து பகுப்பாய்வு செய்தது. றோவுக்கும் மாத்தையாவிற்கும் இடையிலான தொடர்புகள் துல்லியமாக கண்டறியப்பட்டது. இந்தியாவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கோ அல்லது ஏனைய புலனாய்வு பிரிவுகளிற்கோ தெரியாமல் கேரளாவை மையப்படுத்திய RAW வின் ஒரு தனிப்புலனாய்வுக் கட்டமைப்பே மாத்தையாவைக் கையாண்டது எனவும் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் யாழ்மாவட்ட தளபதி கிட்டு பயணம்செய்துகொண்டிருந்த கப்பல் குறித்து இந்தியப் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியது மாத்தையா தான் என விடுதலைப்புலிகள் கருதினர்.

இதன் பின்னர் மாத்தையா கைதுசெய்யப்பட்டு இரகசிய முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டார் என அந்நூலில் தகவல்கள் விரிந்து செல்கிறது.

-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments