நேற்று நோர்வே பூடோவில் நடைபெற்று முடிந்த அங்கிகரிக்கப்படாத நாடுகளுக்கான மகளீருக்கான உலகக்கிண்ணப்போட்டியில் இறுதியாட்டத்தில் மிகச்சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் விளையாடிய தமிழீழ மகளீர் அணி 75 நிமிடங்களை 1-0 எனும் கோல்க்கணக்கில் வெற்றியை தமதாக்கி வைத்திருந்தனர்.
ஆனால் 75வது நிமிடங்களில் ஏற்பட்ட தண்ட உதை மூலம் சாம்பி மகளீர் அணி 1-1 எனும் கோல்க்கணக்கில் சமநிலையைப்பேணியது அதனைத்தொடர்ந்து சாம்பி மகளீர் அணி மீண்டுமொரு கோலை அடித்து வெற்றியை தமதாக்கிக்கொண்டது.
ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டு 13வது நிமிடங்களில் கோலை அடித்த தமிழீழ அணி 75 நிமிடங்கள் வரையும் சாம்பி மகளீர் அணியை மிகவும் சிறப்பாக எதிர்த்து களமாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே விடயம் என்னவெனில் இந்த இறுதியாட்டம் பற்றிய செய்திகளை வெளிக்கொண்டுவந்த நோர்வேயின் தேசிய ஊடகம்(NRK) தமிழீழ மகளீர் அணியின் ஒரு நிழற்படத்தை கூட பிரசுரிக்காமல் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துள்ளது.
இந்த ஊடகங்கள் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படும்போதும் இருட்டடிப்பு செய்தார்கள் ஆனால் சிறீலங்காவின் தூதரகம் உடைக்கப்பட்டபோதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டார்கள் என்பது வரலாறு.
சமாதனத்தை முன்னெடுத்த நோர்வே நாட்டின் தேசிய ஊடகம்(NRK) தொடர்ந்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழிதோண்டி புதைக்க முயல்வதை ஒவ்வொரு தமிழரும் தட்டிக்கேட்கவேண்டும் குறிப்பாக நோர்வேயில் வாழும் எமது இளையோர் இந்த ஊடகத்திற்கு எழுதி கண்டனத்தை வெளிப்படுத்தவேண்டும்.
மனச்சாட்சி அற்ற அறமற்ற இப்படியான தேசிய ஊடகங்களுக்கு எமது கேள்விகளால் அம்பு எய்யவேண்டும்.