தமிழீழ அரசின் அரசியல் வெற்றி நாள் A9 வீதி திறக்கப்பட்ட நாள்!!

You are currently viewing தமிழீழ அரசின் அரசியல் வெற்றி நாள் A9 வீதி திறக்கப்பட்ட நாள்!!

பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9) திறப்பு, உணர்வு பூர்வமான நிகழ்வு: ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படையினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் பிரதான யாழ் -கண்டி வீதி அதிகாரபூர்வமாக 08.04.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதே வேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கெனச் சென்ற 15 தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாங்களுடன் துாக்கி அழைத்துச் சென்றனர். சிங்கள ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்த வன்னியை ஊடறுத்து யாழ்குடாநாட்டுக்கு பாதையமைக்க சிங்கள அரசு மேற்கொண்ட  ஜெயசிக்குறுய் இராணுவ நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள்

இது  தமிழீழ அரசின் அரசியல் மற்றும்  இராணுவ வெற்றி சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கிலான முயற்சியை தோற்கடித்த விடுதலைப்புலிகள் சமாதான முயற்சி வாயிலாக மக்களின் போக்குவரத்துக்கு பாதை திறந்தனர். அப் பாதை வழியே யாழ் சென்ற புலிவீரர்களை மக்கள் வெள்ளம் அன்புப் பெருக்கில் ஆரவாரித்து வரவேற்றது. A9 வீதி திறக்கப்பட்ட நாள் இது தமிழீழ அரசின் வெற்றி நாள்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply