தமிழீழ சட்டவாளர் சிவா பசுபதி காலமானார்.
2002ஆம் ஆண்டு, தமிழீழ அரசுக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பித்த போது, தலைவரால், அரசியல் விவகாரக் குழுவொன்று அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பேச்சுக் குழுவுக்கு உதவவும் ஆலோசனைகளை வழங்கவும், இந்த அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டது.
இதில், சிவா பசுபதியுடன் , மலேசிய
பேராசிரியர் இராமசாமி, சிங்கப்பூர் பேராசிரியர் சொர்ணராஜா, அவுஸ்ரேலிய பேராசிரியர் இமானுவேல்பிள்ளை போல் டொமினிக், சட்ட நிபுணர் விஸ்வேந்திரன் மற்றும் வி.உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன், இரேனியஸ் செல்வின் உள்ளிட்ட வளவாளர்கள் இணைக்கப்பட்டனர். .
இந்த அரசியல் விவகாரக் குழுவினரே, 2003 இல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி வரைவைத் தயாரித்திருந்தனர். அதில் சிவா பசுபதி, முக்கிய பங்கு வகித்திருந்தார். சிறீலங்காவில் சட்டமா அதிபராக நீண்டகாலம் பதவி வகித்தவர் என்ற வகையில், அவரது சட்டவரைவு நிபுணத்துவம், இதற்குத் துணையாக இருந்தது.
2006ஆம் ஆண்டு அரசாங்கத்துடனான பேச்சுகள் முறியும் வரை, விடுதலைப் புலிகளின் அரசியல் விவகாரக் குழுவில் இடம்பெற்றிருந்தார் சிவா பசுபதி, வெளிநாடுகளில் நடந்த பேச்சுக்களிலும் பங்கெடுத்திருந்தார்.
புகழ் வணக்கம் ஐயா 🙏
( படம் : 2003 ஓகஸ்ட் பாரிசில் நடந்த பேச்சுவார்த்தையில் சிவா பசுபதி மற்றும் குழுவினர் )