தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்!

You are currently viewing தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்,தொடர்ச்சி………..

ஈ.பி.ஆர்‌.எல்‌.எவ்‌ இன்‌ தலைமைச்‌ செயலகம்‌ சூளைமேட்டு பிரதான வீதியில்‌ அமைந்திருந்தது. அன்று தீபாவளி பண்டிகை என்பதால்‌ வீதியெங்கும்‌ சனசமுத்திரம்‌. நண்பகல்‌ வேளை ஓட்டோவில்‌ தனது அமைப்பின்‌ செயலகத்திற்கு முன்பாக வந்திறங்கினார்‌ தேவானந்தா. ஓட்டோ கூலிக்கு பேரம்‌ பேசியதில்‌ எழுந்த சிறு தகராறு சொற்‌ சண்டையாக வெடித்தது. “நான்‌ யாரென்று தெரியுமா? காட்டுகிறேன்‌ பார்‌” என்று மிரட்டியபடி தனது அமைப்பின்‌ செயலகத்திற்குள்‌ ஓடிய தேவானந்தா, ஒரு தானியங்கித்‌ துப்பாக்கியுடன்‌ திரும்பி வந்தார்‌. துப்பாக்கியைக்‌ கண்டதுமே ஓட்டோவை விட்டுவிட்டு ஓட்டம்‌ பிடித்திருக்கிறான்‌ ஓட்டோக்காரன்‌. ஓடியவனை நோக்கித்‌ தனது துப்பாக்கியால்‌ தேவானந்தா சிலாவிச்‌ சுட, துப்பாக்கி வேட்டுகள்‌ வீதியால்‌ சென்று கொண்டிருந்த அப்பாவிப்‌ பொதுசனங்களைப்‌ பதம்‌ பார்த்தன. பத்துப்‌ பேர்‌ வரை படுகாயத்துடன்‌ சாய்ந்தனர்‌. ஒரு இளம்‌ வழக்கறிஞர்‌ அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்‌.

சூளைமேடு அல்லோலகல்லோலப்பட்டது. தமிழ்நாடு எங்கும்‌ கண்டனக்‌ குரல்கள்‌ எழுந்தன. ஈழப்‌ போராளி அமைப்புகள்‌ மீது கடம்‌ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஊடகங்கள்‌ வற்புறுத்தின. ஈழ விடுதலை அமைப்புகள்‌ மீது பழிவாங்க தமிழக வீட்டில்‌ வைத்துக்‌ கைது செய்யப்பட்டு வேறொரு காவல்நிலையத்திற்கு அழைத்துச்‌ செல்லப்பட்டார்‌. படம்‌ பிடித்த, கைரேகை பதிந்து, குற்றவாளியைப்‌ போல விசாரிக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டார்‌. பல மணி நேரமாக நிகழ்ந்த குறுக்கு விசாரணையின்‌ பின்னர்‌ எம்மை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்‌. வீட்டுக்கு முன்பாக ஆயுதம்‌ தரித்த காவற்துறையினர்‌ நிலையெடுத்து நின்றனர்‌. நானும்‌ பிரபாகரனும்‌ வீட்டுக்‌ காவலில்‌ வைக்கப்பட்டிருந்தோம்‌. ஆயுதக்‌ களைவு பற்றியும்‌, எனக்கும்‌ பிரபாவுக்கும்‌ இழைக்கப்பட்ட அவமானம்‌ பற்றியும்‌ எம்‌.ஜி.ஆருக்கு முறையிட நான்‌ எடுத்த முயற்சிகள்‌ பயனளிக்கவில்லை. எந்தக்‌ காரணத்திற்காகவும்‌ வீட்டை விட்டு வெளியேற முடியாது என்றார்கள்‌.

அன்றைய தினம்‌ எம்‌.ஜி.ஆர்‌ சென்னையில்‌ இருக்கவில்லை. புதுடில்லியில்‌ இருந்ததாக பின்பு அறிந்தோம்‌. தலைவர்‌ பிரபாகரன்‌ மிகவும்‌ கொதிப்படைந்தார்‌. ஒரு குற்றவாளிபோல்‌ காவற்துறையினரால்‌ கைதாகி காவல்‌ நிலையத்தில்‌ தடுத்து வைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்‌பட்டதை அவரால்‌ ஜீரணிக்க முடியவில்லை. தனது சுயகெளரவத்திற்கு மட்டுமன்றி தமிழீழ மக்களின்‌ சுதந்திர இயக்கத்திற்கும்‌ ஏற்பட்ட இழுக்காகவும்‌ இதனை அவர்‌ கருதினார்‌. தமிழ்நாட்டில்‌ ஏனைய அமைப்புகள்‌ புரியும்‌ குற்றச்‌ செயல்களுக்கும்‌ அடாவடித்தனங்களுக்கும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கம்‌ தண்டிக்கப்பட்டதை அவரால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியவில்லை. இந்தச்‌ சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டு அரசு மீது அவர்‌ வைத்திருந்த நம்பிக்கை இடிந்து போனது. முதலமைச்சரின்‌ அனுமதியின்றி இக்‌ கைது நடவடிக்கையும்‌ ஆயுதக்‌களைவும்‌ நடைபெற்றிருக்க முடியாது எனப்‌ பிரபாகரன்‌ கருதினார்‌.

ஆயினும்‌ காவல்‌ நிலையத்தில்‌ வைத்து பிரபாகரனையும்‌ என்னையும்‌ அவமானப்படுத்தியதில்‌ மோகனதாஸிற்குப்‌ பெரும்‌ பங்குண்டு என்பதையும்‌ அவர்‌ அறிவார்‌ எனினும்‌ தொடர்ந்தும்‌ தமிழ்நாட்டில்‌ தஞ்சம்‌ பூண்டிருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தார்‌.
ஈழ விடுதலை அமைப்புகளை நிராயுதபாணிகளாக்கி, அவ்வமைப்புகளின்‌ தலைவர்களை வீட்டுக்‌ காவலில்‌ வைத்துவிட்டு பங்களூரில்‌ சார்க்‌ மாநாட்டிற்கான ஆயத்தங்களை செய்தது மத்திய அரசு. சார்க்‌ மாநாட்டிற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனா வருகை தர இருப்பதால்‌ பங்களூரில்‌ வைத்து இலங்கையின்‌ இனப்‌ பிரச்சினைக்கு தீர்வு காணும்‌ ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு ரஜீவ்‌ காந்தி விரும்பினார்‌. அக்‌ காலகட்டத்தில்‌ கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப்‌ பிரித்து அதிகாரப்‌ பகிர்வு செய்யும்‌ ஒரு தீர்வுத்‌ திட்டத்தை இந்திய-இலங்கை அரசுகள்‌ தயாரித்தன.

தமிழ்‌ மக்களால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட முடியாத இத்‌ திட்டத்தை பங்களூரில்‌ வைத்து விடுதலைப்‌ புலிகளிடம்‌ திணித்துவிட வேண்டும்‌ என ரஜீவ்‌ காந்தி திட்டமிட்டார்‌. பங்களூர்‌ மாநாட்டிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக தலைவர்‌ பிரபாகரனுக்கும்‌ எனக்கும்‌ போடப்பட்டிருந்த வீட்டுக்‌ காவல்‌ திடீரென நீக்கப்பட்டது. நவம்பர்‌ 16ம்‌ திகதி இரவு பிரபாகரனும்‌ நானும்‌ சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச்‌ செல்லப்பட்டு அங்கிருந்த ஒரு விமானப்‌ படை விமானத்தில்‌ பங்களூர்‌ கொண்டு செல்லப்பட்டோம்‌.
பங்களூரிலுள்ள ராஜபவனுக்கு நாம்‌ போய்ச்‌ சேர இரவு பத்து மணி ஆகிவிட்டது. அங்கு எம்மைச்‌ சந்திப்பதற்காக இந்திய அரசாங்கத்தின்‌ பிரமுகர்கள்‌ பலர்‌ காத்திருந்தனர்‌. அமைச்சர்‌ நட்வார்‌ சிங்‌, வெளிவிவகாரச்‌ செயலர்‌ வெங்கடேஸ்வரன்‌, இலங்கைக்கான இந்தியத்‌ தூதுவர்‌ திரு. ஜே.என்‌.டிக்சிட்‌, வெளிவிவகார அமைச்சைச்‌ சேர்ந்த குல்திப்‌ சகாதேவ்‌. மற்றும்‌ இந்திய புலனாய்வுத்துறை உயர்‌ அதிகாரிகள்‌ ஆகியோர்‌ அங்கிருந்தனர்‌. நாம்‌ அங்கு சென்றதுமே முதலில்‌ திரு.டிக்சிட்‌ எம்மை வரவேற்று நாம்‌ எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்‌ என்பதைக்‌ கூறி, கிழக்கு மாகாணத்தைக்‌ கூறுபோடும்‌ தீர்வுத்‌ திட்டம்‌ பற்றி ஒரு விளக்கமும்‌ தந்தார்‌. ஏற்கனவே அவமானப்பட்டு நொந்து போயிருந்த எமக்கு, ஏற்கமுடியாத ஒரு தீர்வுத்‌ திட்டத்தை இந்தியத்‌ தூதுவர்‌ திணிக்க முயன்றது கடும்‌ சினத்தை ஏற்படுத்தியது. கடுமையான தொனியில்‌ ஒரே வசனத்தில்‌ பதிலளித்தார்‌ பிரபாகரன்‌. “தமிழர்‌ தாயகத்தை பிரிக்கவும்‌ முடியாது, பிரிக்கவும்‌ விடமாட்டோம்‌” என்று அடித்துச்‌ சொன்னார்‌. கிழக்கு மாகாண வரை படத்தைச்‌ சுட்டிக்‌ காட்டி, விளக்கங்கள்‌ கூறி, ஏதொவெல்லாம்‌ அலம்பிக்‌ கொண்டிருந்தார்‌ டிக்சிட்‌. எதிலுமே அக்கறை காட்டாது, பதிலும்‌ கூறாது, இறுக்கமாக மெளனம்‌ சாதித்தார்‌ பிரபா. இறுதியில்‌ நான்‌ குறுக்கிட்டு, “எமது இயக்கத்தின்‌ நிலைப்பாட்டை இரத்தினச்‌ சுருக்கமாகச்‌ சொல்லவிட்டார்‌ திரு.பிரபாகரன்‌. தமிழர்‌ தாயகத்தைக்‌ கூறுபோடும்‌ எந்தத்‌ திட்டத்தையும்‌ நாம்‌ ஏற்கப்போவதில்லை. இது பற்றிக்‌ கதைத்தும்‌ பலனில்லை” என்றேன்‌. என்னையும்‌ பிரபாவையும்‌ முறைத்தப்‌ பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார்‌ டிக்சிட்‌. இந்தியத்‌ தூதுவரின்‌ முயற்சி தோல்வியில்‌ முடிந்ததும்‌, அடுத்ததாக திரு.வெங்கடேஸ்வரனைக்‌ களத்தில்‌ இறக்கினார்கள்‌. ரஜீவ்‌ காந்தியின்‌ நிர்வாகத்திலுள்ள ஒரு முக்கிய தமிழ்‌ அமைச்சர்‌ என்பதால்‌ அவர்‌ மூலம்‌ ஏதாவது சாதிக்கலாம்‌ என எண்ணினார்கள்‌ போலும்‌. திரு.வெங்கடேஸ்வரன்‌ மிகவும்‌ அன்பாகவும்‌ பண்பாகவும்‌ கதைத்தார்‌.

எமது நிலைப்பாட்டை இந்தியத்‌ தூதுவர்‌ தமக்கு எடுத்துரைத்ததாகச்‌ சொன்னார்‌. ஆயினும்‌ இப்பொழுது முன்வைக்கப்படும்‌ தீர்வுத்‌ திட்டம்‌ நிரந்தரமானதல்ல என்றும்‌ ஒரு இடைக்கால ஓழுங்கு என்றும்‌ விளக்கினார்‌. இலங்கையின்‌ இனப்பிரச்சினைக்கு வெகு விரைவில்‌ ஒரு தீர்வு காணப்படவேண்டும்‌ என்பதில்‌ ரஜீவ்‌ ஆர்வமாக இருக்கிறார்‌. இந்த சார்க்‌ மாநாட்டில்‌ ஒரு தீர்வு எட்டப்படுமானால்‌ அது அவருக்கு ஒரு பெரிய அரசியல்‌ -இராஜதந்திர வெற்றியாக அமையும்‌ என்றார்‌. இப்படியெல்லாம்‌ கூறிவிட்டு எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டார்‌. பிரபாகரனுக்குக்‌ கோபம்‌ வந்துவிட்டது. “ரஜிவ்‌ காந்தியைத்‌ திருப்திப்படுத்துவதற்காக எமது விடுதலைப்‌ போராட்டத்தை விற்கவா சொல்கிறீர்கள்‌?” என்று கடிந்து சொன்னார்‌.

வெங்கடேஸ்வரன்‌ மலைத்துப்‌ போனார்‌. “எனக்கு உங்களது மனநிலை புரிகிறது” என்று சொல்லி ஒருவாறு சமாளித்துக்‌ கொண்டு விடைபெற்றார்‌. அடுத்ததாக, இந்தியப்‌ புலனாய்வுத்‌ துறை அதிகாரிகள்‌ வந்தார்கள்‌. எவ்வளவோ முயற்சித்துப்‌ பார்த்தார்கள்‌. முடியவில்லை. பிரபாகரனை நெகிழ்வுபடுத்தும்‌ இறுதி ஆயுதமாக எம்‌.ஜி.ஆரைப்‌ பயன்படுத்த முடிவாகிற்று. மறுநாள்‌ தமிழக முதல்வர்‌ பங்களூருக்கு அழைக்கப்பட்டார்‌.

தலைவர்‌ பிரபாகரனும்‌ நானும்‌ முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களைச்‌ சந்தித்தபொழுது, அவரோடு அமைச்சர்‌ பண்டுருட்டி இராமச்சந்திரணும்‌ இருந்தார்‌. நாம்‌ எமது நிலைப்பாட்டை அவருக்குத்‌ தெளிவாக விளக்கினோம்‌. வரலாற்று ரீதியாக தமிழ்‌ மக்கள்‌ வாழ்ந்து வரும்‌ தாயக பூமியைக்‌ கூறுபோடூம்‌ திட்டம்‌ ஒன்றைத்‌ தயாரித்து அதனை எம்‌ மீது திணித்து விட ரஜீவ்‌ அரசு முயற்சிக்கிறது என்பதைக்‌ கூறி, இத்‌ திட்டத்தை எம்மால்‌ ஏற்க முடியாது என உறுதிபடக்‌ கூறினோம்‌. எமது வாதத்தை எம்‌.ஜி.ஆர்‌ பொறுமையாகக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தார்‌. எமது நிலைப்பாட்டை ஏற்றுக்‌ கொள்வது போன்று இடையிடையே தலையையும்‌ அசைத்துக்‌ கொண்டார்‌. நாம்‌ பேசி முடித்ததும்‌, அமைச்சர்‌ பண்டுருட்டியைப்‌ பார்த்து, “ஈழத்‌ தமிழர்‌ வாழும்‌ பிரதேசத்தை எதற்காகக்‌ கூறுபோட்டுப்‌ பிரிக்க வேண்டும்‌” என்று கேட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌.
“கிழக்கு மாகாணத்தில்‌, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்கள்‌ இருக்கின்றன. அங்கெல்லாம்‌ தமிழர்களுடன்‌ சிங்களவர்களும்‌ முஸ்லிம்களும்‌ வாழ்ந்து வருகிறார்கள்‌. அதனால்தான்‌ கிழக்கு மாகாணத்தைக்‌ கூறுபோட முனைகிறார்கள்‌” என்றார்‌. அமைச்சர்‌. உடனே நான்‌ குறுக்கிட்டு, “கிழக்கில்‌ தமிழ்‌ பேசும்‌ முஸ்லிம்‌ மக்கள்‌ வாழ்கிறார்கள்‌ என்பது உண்மைதான்‌.

ஆனால்‌ கிழக்கில்‌ பெரும்பான்மையான சிங்களவர்கள்‌ பலவந்தமாக சிங்கள ஆட்சியாளர்களின்‌ உதவியுடன்‌ தமிழர்‌ நிலத்தில்‌ குடியேற்றப்பட்டவர்கள்‌” என்றேன்‌. எம்‌.ஜி.ஆர்‌ சிறிது நேரம்‌ சிந்தித்தார்‌. பின்பு அமைச்சர்‌ பண்டுமுட்டியைப்‌ பார்த்து, “தமிழர்‌ வாழும்‌ நிலம்‌ தமிழருக்குச்‌ சொந்தம்‌. சிங்களவர்கள்‌ வாழும்‌ நிலம்‌ சிங்களவர்களுக்குச்‌ சொந்தம்‌. அதுதானே இந்திய அரசு கூறும்‌ நியாயம்‌” என்று கேட்டார்‌. அதற்கு ஆமாப்‌ போட்டார்‌ அமைச்சர்‌. எம்‌.ஜி.ஆருக்கும்‌ பண்டுருட்டியாருக்கும்‌ மத்தியிலான விவாதம்‌ ஒரு விசித்திரமான திசையை நோக்கி நகர்ந்தது. எம்‌.ஜி.ஆர்‌ கேள்விகளை ஆடுக்கிச்‌ செல்ல “ஆமா’ போட்டுக்‌ கொண்டிருந்தார்‌ அமைச்சர்‌.
“வடக்குக்‌ கிழக்கில்‌ பெரும்பான்மையாக வாழ்பவர்கள்‌ யார்‌? தமிழர்கள்‌ அல்லவா?” “ஆமா சார்‌” “தென்‌ இலங்கையை எடுத்துக்‌ கொண்டால்‌, மலைநாட்டில்‌ பொரும்பான்மையாக வாழ்பவர்கள்‌ யார்‌? தமிழர்கள்‌ அல்லவா?” “ஆமா சார்‌” “தென்னிலங்கைத்‌ தலைநகரான கொழும்பில்‌ பெரும்பான்மையாக வாழ்பவர்கள்‌ யார்‌? தமிழர்கள்‌ அல்லவா?” சிறிது தயக்கத்துடன்‌ ஆமாப்‌ போட்டார்‌ அமைச்சர்‌.

“முழு இலங்கையிலும்‌ தமிழர்கள்தானே பரவலாக வாழ்கிறார்கள்‌ இல்லையா?” “ஆமா சார்‌” “அப்படிப்‌ பார்த்தால்‌, இந்திய அரசின்‌ நியாயப்படி, முழு இலங்கைத்‌ தீவும்‌ தமிழர்களுக்குத்‌ தானே சொந்தமாக்கப்பட வேண்டும்‌. பின்பு எதற்காக தமிழர்‌ நிலத்தைப்‌ பிரிக்க வேண்டும்‌? முழு இலங்கையையும்‌ புலிகளுக்கு அல்லவா கொடுக்க வேண்டும்‌?” என்றார்‌ எம்‌.ஜி.ஆர்‌. சொல்வது தெரியாது தடுமாறினார்‌ பண்டுருட்டியார்‌.
“என்ன நான்‌ சொல்வதில்‌ நியாயம்‌ இருக்கிறது தானே?” என்று கூறி அமைச்சரைப்‌ பார்த்தார்‌ எம்‌.ஜி.ஆர்‌. இம்‌ முறை பண்டுருட்டியாரின்‌ அடித்‌ தொண்டையிலிருந்து நானும்‌ பிரபாவும்‌ எதுவுமே பேசவில்லை. மெளனமாக இருந்து, உரையாடலை ரசித்துக்‌ கொண்டிருந்தோம்‌. எம்‌.ஜி.ஆர்‌. எம்மைப்‌ பார்த்து, “நீங்கள்‌ போகலாம்‌. இந்தியாவின்‌ யோசனையை ஏற்கமுடியாது என நீங்கள்‌ கருதினால்‌, ஏற்க வேண்டாம்‌. ஏற்றுக்‌ கொள்ளும்படி நான்‌ வற்புறுத்த மாட்டேன்‌” என்றார்‌.
எம்‌.ஜி.ஆருக்கு நன்றி கூறிவிட்டு, அவரது அறையிலிருந்து வெளியேறி நடந்து கொண்டிருந்த பொழுது, எம்மை அழைத்தவாறு அமைச்சர்‌ பண்டுருட்டி எமக்குப்‌ பின்னால்‌ ஓட்டமும்‌ நடையுமாக வந்து சேர்ந்தார்‌.

“முழு இலங்கையையும்‌ புலிகளுக்குக்‌ கொடுக்க வேண்டும்‌ என்று தலைவர்‌ சொன்னார்‌ அல்லவா? அதனை சீரியஸாக எடுக்க வேண்டாம்‌. ஒரு வாதத்திற்காக அப்படிச்‌ சொன்னார்‌. தயவு செய்து பத்திரிகையாளர்களிடம்‌ இது பற்றிக்‌ கதைக்க வேண்டாம்‌.” என்று மன்றாட்டமாகக்‌ கேட்டார்‌. நாம்‌ அதற்கு இணக்கம்‌ தெரிவித்தோம்‌.
பங்களுரில்‌ இந்திய அரசு முன்வைத்த யோசனைகளை விடுதலைப்‌ புலிகள்‌ நிராகரித்தது ரஜீவ்‌ காந்திக்கு கடும்‌ சினத்தை ஏற்படுத்தியது. சார்க்‌ மாநாட்டின்போது, இலங்கையின்‌ இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை அறிவித்து, புகழ்மாலை சூட்டிக்‌ கொள்ள விரும்பிய ரஜீவுக்கு புலிகளின்‌ விட்டுக்கொடாத உறுதியான நிலைப்பாடு ஏமாற்றத்தையும்‌ ஆத்திரத்தையும்‌ கொடுத்தது. அற்ப சொற்ப அதிகாரப்‌ பரவலாக்கத்துடன்‌ தமிழர்‌ பிரச்சினைக்குத்‌ தீர்வு கண்டு, இலங்கை அரசை தனது வல்லாதிக்கத்தின்‌ கீழ்‌ கொண்டு வர விரும்பிய இந்திய அரசுக்கு விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கம்‌ ஒரு சவாலாக நின்றது. தமிழர்‌ விடுதலைக்‌ கூட்டணியும்‌ ஏனைய போராளி அமைப்புகளின்‌ தலைவர்களும்‌ இந்திய அழுத்தத்திற்கு பணிந்து, போகத்‌ தயாராக இருக்கும்‌ பொழுது, தலைவர்‌ பிரபா மட்டும்‌ வணங்கா முடியாக, கொண்ட இலட்சியத்தில்‌ உறுதி பூண்டு நிற்பது இந்திய ஆட்சியாளருக்கு எரிச்சலை ஊட்டியது.

இந்தியாவில்‌ பயிற்சி எடுத்து, இந்திய மண்ணில்‌ பயிற்சிப்‌ பாசறைகளை அமைத்து, இந்தியாவில்‌ வாழ்ந்து கொண்டு, இந்திய அழுத்தங்களை எதிர்க்கத்‌ துணிந்த பிரபாகரனுக்கு ஒரு பாடம்‌ புகட்ட வேண்டுமென ரஜீவ்‌ ஆட்சிப்‌ பீடம்‌ எண்ணியது. இதன்‌ அடிப்படையில்‌ பிரபாகரன்‌ பாவித்து வந்த மிக நவீனகரமான, விலையுயர்ந்த தொலைதொடர்பு சாதனங்களைப்‌ பறிமுதல்‌ செய்து, விடுதலைப்‌ புலிகளின்‌ தலைமைக்கும்‌, தமிழீழ களத்திற்கும்‌ மத்தியிலான தகவல்‌ தொடர்புகளைத்‌ துண்டித்துவிட மத்திய அரசு முடிவெடுத்தது. தமிழீழ சுதந்திரப்‌ போராட்டத்திற்கும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கத்திற்கும்‌ எதிராகச்‌ செயற்பட்ட தமிழ்நாட்டுப்‌ புலனாய்வுப்‌ பிரிவின்‌ அதிபரான உதவிப்‌ பொலிஸ்‌ மாஅதிபர்‌ மோகனதாஸின்‌ உதவியுடன்‌ இந்‌ நடவடிக்கை நிறைவேற்றப்பட்டது.

தனது தொலைதொடர்பு சாதனங்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டதை அறிந்ததும்‌ கடம்‌ சினம்‌ கொண்டவராக எனது வீட்டுக்கு வந்தார்‌ பிரபாகரன்‌. “நரம்பு மையத்தில்‌ கைவைத்து விட்டார்கள்‌. இதனை அனுமதிக்க முடியாது. எப்படியாவது, இந்தக்‌ கருவிகளை திருப்பிப்‌ பெற வேண்டும்‌” என்றார்‌. தமிழீழக்‌ களத்துடனும்‌, அனைத்துலக கிளைகளுடனும்‌ திடீரென தொடர்புகள்‌ துண்டிக்கப்பட்டமை பிரபாகரனுக்கு ஆத்திரத்தை மூட்டியதுடன்‌ இந்தியா மீதுள்ள நம்பிக்கையையும்‌ முற்றாகத்‌ தகர்த்தது. முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மீதும்‌ அவருக்குக்‌ கோபம்‌. முதல்வரின்‌ அனுமதியின்றி தமிழ்நாட்டுக்‌ காவல்துறை இந்‌நடவடிக்கையை எடுக்க முடியாது என அவர்‌ கருதினார்‌. இனித்‌ தொடர்ந்தும்‌ தமிழ்நாட்டில்‌ தங்கியிருப்பது தனது உயிருக்கு ஆபத்தாக முடியும்‌ என்றும்‌ சொன்னார்‌.
பறிமுதல்‌ செய்யப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களைத்‌ திருப்பித்‌ தருமாறு கோரிக்கை விடுத்து சாகும்வரை உண்ணாவிரதம்‌ கடைப்பிடிக்கப்‌ போவதாகப்‌ பிரபாகரன்‌ முடிவெடுத்தார்‌. உடனடியாகவே எனது வீட்டில்‌ வைத்தே உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்‌. உணவையும்‌ நீரையும்‌ துறந்த கடும்‌ விரதம்‌. என்னால்‌ தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரபாகரன்‌ தனது முடிவில்‌ மிகவும்‌ உறுதியாக நின்றார்‌. நான்‌ உடனடியாக பத்திரிகையாளர்‌ மாநாட்டைக்‌ கூட்டுவித்து, பிரபாகரனின்‌ உண்ணாவிரதத்தை உலகிற்குத்‌ தெரியப்படுத்தினேன்‌. மறுநாள்‌ காலை பிரபாகரனின்‌ உண்ணாவிரதப்‌ போராட்டத்திற்கு முக்கியத்துவம்‌ கொடுத்து தமிழ்நாட்டு ஊடகங்கள்‌ செய்தியைப்‌ பிரசுரித்தன. இதனையடுத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்‌, இயக்க ஆதரவாளர்கள்‌, ஊடகவியலாளர்‌ ஆகியோரும்‌ தமிழீழ விடுதலை விரும்பிகளுமாக ஏராளமானோர்‌ உண்ணாவிரதம்‌ நடைபெற்ற எனது இல்லத்திற்கு வருகை தந்து, பிரபாகரனுக்கு தமது நல்லாதரவைத்‌ தெரிவித்தார்கள்‌. வீட்டுக்கு முன்புறமாக அணி திரண்ட சனக்கூட்டம்‌ உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகக்‌ குரல்‌ எழுப்பியது. பல்வேறு அரசியல்‌ இயக்கங்களும்‌, அமைப்புகளும்‌, பத்திரிகைகளும்‌ மத்திய, மாநில அரசுகளைக்‌ கண்டித்து அறிக்கைகள்‌ வெளியிட்டன. பிரபாகரனின்‌ உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ தமிழ்நாட்டில்‌ ஒரு அரசியல்‌ சூறாவளியைக்‌ கிளப்பிவிட்டது. முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ அப்பொழுது சேலத்தில்‌ இருந்தார்‌. பிரபாகரனின்‌ உண்ணாவிரதப்‌ போராட்டம்‌ தமிழ்நாட்டில்‌ ஒரு அரசியல்‌ கொந்தளிப்பை உருவாக்கியுள்ளதை அறிந்து மிகவும்‌ கலங்கிப்‌ போனார்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ தொலைதொடர்புக்‌ கருவிகள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்ட விவகாரம்‌ தமக்குத்‌ தெரியாது என அறிக்கை வெளியிட்ட அவர்‌ புதுடில்லி மீது பழியைச்‌ சுமத்தினார்‌. பதிலுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டு அரசு மீது குற்றம்‌ சுமத்தியது.
ஈழ மக்களின்‌ விடுதலைப்‌ போராட்டம்‌ தமிழ்நாட்டில்‌ மிகவும்‌ பிரபல்யம்‌ பெற்றிருந்த காலகட்டம்‌ அது. சிங்கள அரச ஒடுக்குமுறையிலிருந்து ஈழத்தமிழர்கள்‌ விடுதலை பெற வேண்டும்‌ என்பதில்‌ தமிழ்நாட்டுத்‌ தமிழர்கள்‌ பெரும்‌ ஆர்வமும்‌ அக்கறையும்‌ கொண்டிருந்தனர்‌. விடுதலைப்‌ புலிகள்‌ சுதந்திர வீரர்களாக மதிக்கப்பட்டனர்‌. தலைவர்‌ பிரபாகரன்‌ ஒரு வரலாற்று நாயகனாகப்‌ போற்றப்பட்டார்‌. அப்படிப்பட்ட ஒரு மாபெரும்‌ வீரன்‌ தமிழ்‌ நாட்டு அரசிடம்‌ பிரபாகரன்‌ முன்பாக வைத்தார்கள்‌. மிகவும்‌ சோர்ந்து போயிருந்த பிரபாகரனது முகத்தில்‌ லேசாக ஒரு புன்னகை மலர்ந்தது. பிரபாகரனது நாற்பத்து எட்டு மணி நேர உண்ணாவிரதம்‌ முடிவுக்கு வந்தது. திராவிடக்‌ கழகத்‌ தலைவர்‌ வீரமணி அவர்கள்‌ பழச்சாறு ஊட்ட, அங்கு குழுமியிருந்த பெருந்திரளான ஆதரவாளர்கள்‌, போராளிகள்‌, பத்திரிகையாளர்கள்‌ மகிழ்ச்சி ஆரவாரம்‌ தெரிவிக்க, அந்த வரலாற்று நிகழ்வு முடிவுக்கு வந்தது.
ஒரு சில வாரங்களுக்குப்‌ பின்னர்‌ முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ தலைவர்‌ பிரபாகரனையும்‌ என்னையும்‌ பறங்கி மலையிலுள்ள தனது இல்லத்திற்கு அழைத்தார்‌. எம்மைக்‌ கைது செய்து அவமானப்படுத்தியது, எமது ஆயுதங்களையும்‌ பின்பு தொலைதொடர்பு சாதனங்களையும்‌ பறித்தெடுத்தது சம்பந்தமாக நீண்ட நேரம்‌ கலந்துரையாடல்‌ நடந்தது . தொடரும்….

பகிர்ந்துகொள்ள

Leave a Reply