தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாக ஒழுங்கைத் தானும் பேணி, கட்டளையைச் செவிமடுத்து,
அதனைக் கடைப்பிடித்து,
ஊக்கம் தந்தவர் எமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.
தமிழீழத்தில் சுண்டிக்குளம் பகுதியில்
அமைந்திருந்தது அந்தப்
பயிற்சிமுகாம்.
எமது அனைத்துப் படையணிகளும் தங்கி நின்று சண்டைக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தன.
ஆனையிறவு மீட்பும்,
அதன் பின்னரான
படையணி மீள் ஒழுங்கும்,
பயிற்சியும் , எனத் தொடரும்…
அந்தத் தளத்தை றோமியோ முகாம்
என அழைப்போம்.
(முதன்முதலாக தொடங்கப்பட்ட
அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியின்
பொறுப்பாளர்
லெப் கேணல் ராஜன் இவரது சங்கேதப்பெயர்
Romio november)
சிறிய காட்டுத்துண்டை ஊடறுத்து பயணித்தால்
வரக்கூடிய *வெட்டை*யான நிலப்பரப்பு.
முடிந்தளவு இரகசியமானது.
உள்ளே செல்வதற்கான
மட்டுப்படுத்தப்பட்டதான பாதை.
முகாமை அண்மிக்கும் போது சென்றி மறிப்பு(காவல்) உண்டு.
அந்தக் கண்காணிப்பு நிலையத்தின் பதிவேட்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்.
அல்லது
M.O தினேஷ் மாஸ்டர்,
வீரப்பன் மாஸ்டரின்
சிறப்பு அனுமதி வேண்டப்படும்.
வழமைபோன்று
அந்த வாகனம்
வருகிறது.
இம்முறை சென்றியில்
புதிய இளைய போராளிகள் இருவர்.
பாதைமறிப்புக் குறுக்குத் தடி அகற்றப்படவில்லை.
வழக்கத்திற்குமாறான
சிறு ஏற்பாடு…
அவர்களுக்கும் வாகனத்தை அடையாளம் காணத் தெரியவில்லை.
பதிவுக்கொப்பியை திறந்து
அண்ண…
பேரச்சொல்லுங்க..என்று
காவற்கடமையிலிருந்தவர். அவர்களை வலியுறுத்துகிறார்.
வாகனத்தில் இருந்தவர்களை ,அமைதியாக கவனிக்குமாறு தளத்தின் உள்ளேயிருந்து பணிக்கப்படுகிறது,
வாகனக் கண்ணாடியும் மெல்ல இறக்கப்படுகிறது.
எனது பெயர் சந்திரன்
எனச் சொல்லப்படுகிறது.
பதிவேட்டில்
அவசர அவசரமாக
இளையவர் இருவரும்
பெயரைத் தேடுகின்றனர்.
அண்ண
உங்கட பேர் பதிவுகொப்பியில்
இல்லை,
சென்றிக்(காவல்) கொட்டிலுக்குள்
இருந்து கொண்டு
வாகனத்தினுள் எட்டி
மேலோட்டமான ஒருபார்வை
தெரிஞ்சமாதிரித்தான்
கிடக்கு
எதுக்கும் பொறுப்பாளரிட்ட ஒருக்கா கதையுங்கோ..
மிகப்பொறுமையாக ரசித்துக்கொண்டும்
புன்முறுவலோடும்,
அனுமதி பெற்று
உள்ளே செல்கின்றார்
எமது தலைவர்… ஆம் வாகனத்தினுள்ளே இருந்தது அனுமதிக்காகக் காத்திருந்தது தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் .
அவ்வளவுதானா?
சந்திரன் என்ற
பெயரை எழுதிவைக்கிறோம்
என்று சொல்லிக் கடமையிலிருந்த போராளிகள்
எழுதும் போது, பேனாவில் மை அடைப்பு இருந்ததால்
அதனை உதறி உதறி பயன்படுத்தியதை
அவதானித்த
நம் தலைவர்
உள்ளே சென்றுவிட்டு
திரும்பி வரும்போது
ஆளுக்கொரு பேனாவைப் பரிசாகக்
கொடுத்துவிட்டு வருகிறார்.
* ஆம் கட்டளைகளைப் பிறப்பித்த பெருந்தலைவர் தானும் அந்தக்கட்டளைகளை மதித்து ஏற்று நடந்தார். அந்த வரலாற்றுப் படிமம்தான் நாங்கள் ஒரு பேரியக்கமாக இன்றுவரை விடுதலைப்போரை நடாத்த உந்துசக்தியாக இருக்கிறது .
இந்தப்
பொதுவான முகாம் நடைமுறைக்கு ஒத்துழைத்து,
உரியநேரத்தில்,உரிய இடத்தில்
இரு இளைய போராளிகளால் தான் வழிநடத்தப்படுவதை
விரும்புகிற நம்தலைவரின்
மனோதைரியத்தை.
பேரன்பின் கொப்பளிப்பை
நிரூபிப்பதற்கான
இயல்பு நிலையை உருவாக்க,
கட்டுப்பாட்டில் புகழ்மிக்க ஓர் அணி மேலெழுந்து வர..
நீண்ட உரையாடல்களை, கதையாடல்களை
வரவேற்போம். உலகில் ஆயிரம் தலைவர்கள் தோன்றியிருக்கலாம் இவர் போல் இன்றளவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வழிநடத்துபவர்கள் யாருமில்லை. என்றும் எம்மை வழிநடத்தும் விடுதலைத் திசைகாட்டி…..
-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-