தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் , இயங்குநிலை கோட்பாடு. எவ்வாறு இருக்க வேண்டும்!

You are currently viewing தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் , இயங்குநிலை கோட்பாடு. எவ்வாறு இருக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் , இயங்குநிலை கோட்பாடு. எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது செயற்பாட்டின் வழியாக வகுத்து வைத்துள்ளார். அதுவே தேசியத்தலைவர், மேதகு பிரபாகரன் சிந்தனை எனச் சொல்லப்படும் தமிழீழத்திற்கான வழிவரைபடமாகும். ஆரம்ப காலங்களில் தேசியத்தலைவர். மேதகு பிரபாகரன் சிந்தனை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகளினால் தெளிவாக, புரிந்து உள்வாங்கப்பட்டு, அதன்வழிகாட்டலில் போராளிகள் செயற்பட்டார்கள்.

படிப்படியாக மேதகு சிந்தனையானது, மக்கள் மனங்களில் ஆழமாக வேர்வேரூன்றத் தொடங்கியது ,காலவோட்டத்தில் அதுவே பெருவிருட்சமாகி பயன்தரத்தொடங்கியது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்ட தமிழீழம் என்ற இலக்கு சார்ந்த கோட்பாட்டுத் தத்துவம். போராளிகளினால் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு, படிப்படியாக மக்கள் மனங்களில் ஊடுருவி ஆழப்பதிந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இது ஒரு பரிணாம வளர்ச்சி.இந்தப் பரிணாம வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது.ஏனெனில் பரிணாமங்கள் என்றும் பின்னோக்கிச் செல்வதில்லை.தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்-போராளிகள்-மக்கள் இதுவே தமிழீழ விடுதலைக் கோட்பாட்டுச் சக்கரம். இந்தச் சக்கரம் வீரியமாக மீளெழுச்சி கொண்டு விட்டது. எனவே பிராந்தியச் சக்கரங்கள் இதனைப் புரிந்து கொண்டு, வெளியுறவுக்கோட்டுருவாக்கங்களை சீரமைக்க வேண்டும். பூகோள வர்த்தக,சந்தை,இராணுவ, கேந்திர மையங்களும் வேற, தலைகீழ் மாற்றங் கண்டு வருகிறது . நீண்டகாலத்திற்கு சுயநிர்ணய உரிமையுள்ள தேசிய இனங்களை வல்லாதிக்க பிடியினுள் வைத்திருக்கலாம் என கனவு காண முடியாது. சுபாஸ்சந்திரபோஸ் தென்னாசியாவின் மிகப்பெரிய விடுதலை இராணுவத்தை கட்டியெழுப்புவார் என பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் கனவில கூட நினைக்கவில்லை.

இந்திய மக்கள் நம்பினார்கள் , நேதாஜியைப் பலப்படுத்தினார்கள். பிரிட்டிசாரை வெளியேற்றினார்கள். அதைவிட பல மடங்கு நம்பிக்கை தமிழீழ மக்களிற்கு தேசியத்தலைவரின் சிந்தனையின் மீதுள்ளது. தமீழீழத்தை வென்றெடுப்போம் என திடமாக நம்புகிறோம். ஆகவே மேதகு பிரபாகரன் சிந்தனை இன்று வந்தடைந்துள்ள இடம் உலகத்தமிழினத்தின் முடிவுகள் என்னும் முக்கியமான பகுதி. எனவே தமிழீழம் என்னும் இலக்கை நோக்கிய பயணத்தில், தேசியத்தலைவரின், விடுதலைப்போராட்ட மரபுகளைக் கொண்டு வழிநடத்தக்கூடிய இயங்குநிலை சக்தி எது என்பதில் தமிழ் மக்கள் , தெளிந்த சிந்தனையுடன் உள்ளனர். தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்ட சிந்தனை , ஏறக்குறைய 35 ஆண்டுகளில் , தமிழ்மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன்வழி முடிவுகளை எடுக்க வைத்துள்ளது என்றால், மேதகு பிரபாகரன் வகுத்த தத்துவம் வெற்றிப்பாதையை அண்மித்து விட்டது என்று தானே அர்த்தம் . இந்த தத்துவப் புரிதலின் விளைவையே,நாங்கள் இம்முறை 2023 மாவீரர்நாளில் கண்டோம். தமிழீழ விடுதலைப்புலிகளின் நேரடி வழிநடத்தல் இல்லாமல், தன்னெழுச்சியாக. தமிழீழத்திலும். தமிழர்வாழும் புலம்பெயர் தேசங்களிலும் திரண்ட மக்கள் வெள்ளம். இதனைக் கட்டியம் கூறி நிற்கிறது. அடுத்தது மாவீரர் நாளன்று , தேசியத்தலைவரின் மகள் என புனைவு கதைகளைக் கூறிக்கொண்டு , உரையாற்றினார் ஒரு பெண், அந்த உரையானது உலகில் எந்த மாவீரர்நாள் நிகழ்விலும் ஒளிபரப்பப்படவில்லை.

அப்பெண்ணையையும் அந்த உரையையும் முற்றுமுழுதாக தமிழீழ மக்கள், தமிழக மக்கள், புலம்பெயர் தமிழர்கள் நிராகரித்தனர். சரியானது எது தவறானது எது என தேர்ந்தெடுத்து அதன்வழி விடுதலைப்பயணம் செய்யும் சக்தியை இந்த 35 ஆண்டுகளில் மேதகு பிரபாகரன் சிந்தனை தமிழ் மக்களிற்கு வழங்கியுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவரின் மரபுவழியிலான வழித்தடத்தில், செயற்பாட்டு ரீதியாக , வெளிக்கொண்டுவரப்படாத எந்தவகையான முனைப்புகளையும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மாறாக அவ்வகையான , தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தடம்மாற்றி நீர்த்துப் போகச் செய்யும் முனைப்புகளைத் தமிழ்மக்கள் முற்றாக நிராகரிப்பார்கள்.

காலங்காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சி கொண்டு வெற்றியை அண்மிக்கும் போதெல்லாம் பிராந்திய வல்லரசுகளும், உலக ஏகாதிபத்தியமும் இடையில் ஊடுருவி தடம்மாற்றிய வரலாறுகளைத் தேசியத் தலைவர் தன் சிந்தனையில் பதித்துள்ளார். அது இன்று வழிகாட்டுகிறது, தடை அகற்றுகிறது. எனவே தேசியத்தலைவரின் மகள் என்னும் ஏமாற்றுப் போர்வையில் வந்த பெண்ணை , தமிழ்மக்கள் முற்றாக நிராகரித்தனர். இந்த தெளிவான முடிவிற்கு தமிழ் மக்களிற்கு வழிகாட்டியது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிந்தனையாகும். இவ்வகையான தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் இன்னும் தொடரத்தான் போகிறது. வேறுவடிவங்களில், உயர்பரிமாணங்களில், எதிர்பார்க்க முடியாத தரப்புகளிலிருந்து, எனவே இது முற்றுப்புள்ளி அல்ல. கால்குறிதான் இவையெல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்து முடிவெடுக்க, எம்மிடமிருக்கும் ஆயுதம் * தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் சிந்தனை,

This is one man Army அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

பகிர்ந்துகொள்ள

Leave a Reply