தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் குறித்தும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் குறித்தும் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்தும் சர்ச்சையான கருத்து தெரிவித்த இனப்படுகொலையாளி சரத் பொன்சேகாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய கனகரட்ணம் சுகாஸ் அவர்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் எந்த நாட்டிடமும் கடன் கேட்டுப் பிச்சை எடுத்திருக்கவில்லை. அதுபோல தமது மக்களையும் அவர்கள் அரிசிக்கும் பருப்புக்கும், வேற்று நாடுகளிடம் கையேந்த வைக்கவுமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் தமது நிலங்களையோ, வளங்களையோ எந்த நாட்டிற்கும் விற்பனை செய்திருக்கவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் வெளிநாடுகளின் போர்வீரர்களைத் துணைக்கு அழைத்துப் போரிட்டிருக்கவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்கள் எந்தவொரு சிங்களப் பெண்ணையும் துஸ்பிரயோகம் செய்திருக்கவில்லை.உச்சமாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், யாழ்ப்பாணம் கோட்டைப் பெருஞ்சமரின்போது கோட்டைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த சிங்கள இராணுவம் உண்ண உணவும் குடிக்கத் தண்ணீருமின்றித் தவித்தபோது உணவையும் நீரையும் இராணுவத்திற்கு அனுப்பி மனிதாபிமானத்தின் எல்லைவரை சென்றவர்கள் அவர்கள். ஆனால், நீங்களோ பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனுக்குப் பிஸ்கட் கொடுத்துவிட்டுச் சுட்டுப் படுகொலை செய்தவர்கள்.
இப்பொழுது கூறுங்கள் சரத் பொன்சேகா அவர்களே யார் படிப்பறிவற்றவர்கள்??? என்று இனப்படுகொலையாளி சரத் பொன்சேகாவின் கருத்துக்கு எதிராக எதிர்வினையாற்றியுள்ளார் கனகரட்ணம் சுகாஸ் ,