தமிழீழ விடுதலையை வென்றெடுக்க திலீபன் ஊர்த்தி பவனி முன் நெஞ்சுருகி உறுதியெடுத்த மக்கள்!

You are currently viewing தமிழீழ விடுதலையை வென்றெடுக்க திலீபன் ஊர்த்தி பவனி முன் நெஞ்சுருகி உறுதியெடுத்த மக்கள்!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க  சொல்லி , தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் அவர்களின்  35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும்   வட தமிழீழம் .யாழ் நல்லூரில் அமைந்துள்ள  திலீபன் அவர்களின் நினைவிடத்தில்  நேற்று  (15-09-2022) தொடங்கியது அத்துடன்  பொத்துவில் தொடக்கம் யாழ்பாணம் நல்லூர் வரையிலான  திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய  ஊர்த்தி  பவனியும்  நேற்றைய தினம்  பொத்துவிலில் ஆரம்பமாகியது.

தமிழீழ விடுதலையை வென்றெடுக்க திலீபன் ஊர்த்தி பவனி முன் நெஞ்சுருகி உறுதியெடுத்த மக்கள்! 1

இரண்டாம் நாளான இன்று (16-09-2022)  ஊர்த்தி  பவனி களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டது  இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு பொது மக்களால்  மலர் தூவி திலீபனின் உருவப்படத்திற்கு   மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலையை வென்றெடுக்க திலீபன் ஊர்த்தி பவனி முன் நெஞ்சுருகி உறுதியெடுத்த மக்கள்! 2

 தென்தமிழீழம் களுதாவளையை ஊர்த்தி  பவனி  அண்மித்த போது தியாக தீபம் லெப்  கேணல் திலீபன் அவர்களை நெஞ்சுருகி வழிபட வீதியின் இருமருங்கிலும் தன்னெழுச்சியுடன் மக்கள் தேடிவந்த  உணர்வெழுச்சியுடன்   நினைவேந்தி திலீபனின் கனவை நினைவாக்க  பொருளாதார இடர்களை எதிர்கொண்டாலும்  சிங்கள பேரினவாத அரசின் தமிழின அழிப்பை  தகர்த்து எமது தாயகத்தின்   விடுதலையை வென்றெடுக்க    உறுதியெடுத்தார்கள்.

தமிழீழ விடுதலையை வென்றெடுக்க திலீபன் ஊர்த்தி பவனி முன் நெஞ்சுருகி உறுதியெடுத்த மக்கள்! 3

இதேபோன்று வாழைச்சேனையிலும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply