தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபனின் தாயார் திருமதி.நடராஜா சறோஜினிதேவி இன்று செவ்வாய்க்கிழமை(16.11.2021) அதிகாலை-05 மணியளவில் யாழில் காலமானார்.
யாழ்.மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்மையாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல்-04 மணியளவில் தெல்லிப்பழை பன்னாலையில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காகப் பூதவுடல் கீரிமலை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் சட்டத்தரணி காண்டீபன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.