பொய்களை செய்திகளாக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் ஊடகப் பேச்சாளரையும் அழிக்கத் துடிக்கும் ஊடகப்போர்வைக்குள்இருக்கும் சிலர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கான விட்டுக்கொடுக்காத விடுதலை அரசியலை முன்னெடுத்துவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சிதைப்பதற்காக பல முயற்சிகளை எதிரிகளும் அதன் உதிரிகளும் முன்னெடுக்கின்றபோதும் சற்றும் தளராது ஒற்றைப்பனையாய் உறுதியோடு அரசியல் பணியையும் மக்கள் பணியையும் முன்னெடுத்து வருவதால் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தனித்துவத்தை சிதைப்பதற்காக இப்படியான ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.