தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாதை மாறாத பயணம்!

You are currently viewing தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாதை மாறாத பயணம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பயணத் தடம்

*01*
1987 இல் புதுடில்லியில்,கடுமையான தடுப்புக்காவலில் வைத்து ,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை
ஏற்குமாறு வற்புறுத்திய போதும், அதனை ஏற்கமறுத்தார் நம் தேசியத்தலைவர்.

நம் தலைவரை நோக்கி,
மிஸ்டர் பிரபாகரன்…..
நீங்கள் எங்களை மூன்று தடவைகள் ஏமாற்றிவிட்டீர்கள் என்று கடிந்து கொண்ட
(தீக்சித்)
இந்திய உயர் அதிகாரியிடம்,

நமது தலைவரின் பதில்…

அப்படியென்றால் நான், *எனது மக்களை மூன்று தடவைகள் காப்பாற்றியிருக்கிறேன்* என்று உண்மையை இடித்துரைத்தார்,

*தடுமாறவில்லை,தடம்மாறவில்லை*.
*02*
தமிழர்கள் வந்தேறிகள்
என்றார் திருமதி சந்திரிகா
பண்டாரநாயக்க
அதற்கு ஒத்து ஊதினார்
அமரர்
லக்க்ஷ்மன் கதிர்காமர்.
இவர்களின்
விஷமத்தனமான பிரச்சாரத்தை,
முறியடித்து

*தமிழர் நாம் பூர்வீக குடிகள்தான்*, *இறைமையுள்ள மக்கள் இனம்தான்* என்பதை
வரலாற்று ஆதாரங்களுடன் ,தர்க்கபூர்வமாக,உணர்வுபூர்வமாக, நடைமுறை தெளிவோடு தென்னாபிரிக்க *சர்வதேச மாநாட்டில்* நிரூபித்துக் காட்டியவர்
*மாமனிதர் திரு குமார் பொன்னம்பலம்* அவர்கள்,

*தடுமாறவில்லை,தடம் மாறவில்லை*,

சிங்கள ஆட்சியாளர்களால்
கொழும்பு வில் வைத்து
படுகொலை செய்யப்பட்டார்.
*03*
அதே தடத்தில் நின்றுகொண்டு
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை சிங்கள
நாடாளுமன்றிலும்,ஐ.நா
அரங்கிலும்,சர்வதேச உயர்தரப்பிலும் , தொடர்ந்தும்
உரத்து வலியுறுத்தி நிற்பவர், அந்த மாமனிதரின் மகன்
*நமது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்* அவர்கள்.

இவர்கள் நம் மண்ணுக்காக நம் மக்களுக்காக உண்மையை கர்ச்சித்தவர்கள்,
கர்ச்சித்துக்கொண்டே
*மக்கள் முன்னணியாகி நிற்கின்றனர்*.

இங்கு இப்போதும் *தடுமாறாத* *தடம்மாறத,அடிபணியாத அரசியல் பயணம்* தொடர்கிறது.

தமிழ்மக்களின் *உண்மையான தோழனாக*
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
நம்பிக்கை தருகிறது.

தொடரும்……

மன்னார் சுரேஷ்

பகிர்ந்துகொள்ள

Leave a Reply