தமிழர் நிலம் மீது மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் முதன்மை ஆளாகக் களத்தில் நின்று போராடுபவர்கள்.
தமிழர் நிலம் மீது மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலைக்கு எதிராக தொடர்ந்தும் குரலெழுப்பி வருபவர்கள்.
தமிழர்களுக்கு தேவையான அரசியல் விடயத்தில் எவ்வித சமரசமுமின்றி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், சர்வதேச அரங்கிலும் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள்.
தமிழர்கள் மீது இலங்கையும், இலங்கைக்கு வெளியான நாடுகளும் மேற்கொண்ட இனவழிப்புக்கு சர்வதேச நீதியைக் கோருபவர்கள்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சரியான தீர்வினை முன்வைப்பவர்கள். அது விடயத்தில் தமிழர் நலன் மீறி செயற்படாதவர்கள்.
புவிசார் அரசியல் விடயத்தில், தூதரகங்களின் நிபந்தனைகளுக்குப் பணிந்து பணிசெய்பவர்களாக அல்லாமல், இனநலனை முதன்மைப்படுத்தி வேலைசெய்பவர்கள்.
இந்த இனத்தின் விடுதலைக்காக விதையான அனைத்து வீரமறவர்களையும் மெய்யுணர்வோடு நினைவேந்துபவர்கள்.
தமிழர்களை எவ்விதக் பிரிப்புக்குள்ளும் வகைப்படுத்தாமல், தமிழர் தேசமாகக் கூட்டிணைத்து வைத்திருப்பவர்கள்.