தமிழ்த் தேசிய அரசியலில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்தும், தீர்வுத்திட்ட முயற்சிகளில் தமிழ்த்தேசிய கட்சிகள் எடுக்க வேண்டிய முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வலம்புரி விருந்தினர் விடுதியில் குறித்த கலந்துரையாடல் இன்று மாலை நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , முன்னணியின் கொள்கைபரப்பு செயலாளர் நடராசா காண்டீபன் மற்றும் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டிருந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்திருந்தனர்.


