தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை!

You are currently viewing தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனவும், அதனை இலக்காகக்கொண்ட முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை இதுகுறித்து முதலில் தமது கட்சிக்குள் கலந்துரையாடித் தீர்மானிக்க வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

எது எவ்வாறிருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனவும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply