முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி-சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், அவருக்கு நீதி வேண்டியும் யாழ்ப்பாணத்தில் இன்று (04,10,2023) புதன்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
யால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடாத்தப் பட்டுள்ளது.
கே.கே.எஸ் வீதியின் கொக்குவில் பூநாறி மரத்தை அண்டிய பகுதியில் இன்று காலை-9.30, மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் வாய்களைக் கறுத்தத் துணிகளால் கட்டியும்,அமைதியான முறையிலும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன், கட்சியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணிமான கனகரத்தினம்-சுகாஸ், உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.