தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2009ககுப் பின்னரான வெகுஜன போராட்டத்தின் முன்னோடி கட்சியாகும்.

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2009ககுப் பின்னரான வெகுஜன போராட்டத்தின் முன்னோடி கட்சியாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2009ககுப் பின்னரான வெகுஜன போராட்டத்தின் முன்னோடி கட்சியாகும்.

2010 இல் முதலாவது போராட்டம் முன்னணியினரால் யாழ் நகரில் ஒழுங்குபடுத்தப்பட்டு அதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்து அதற்கு எதிராக முன்னணியினர் மீளாய்வு வழக்கு தாக்கல் செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் குறித்த தடை இரத்துச் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மீள போராட்டத்திற்கு அழைத்து போராட்ட வெளியை திறந்து விட்டது முன்னணி தான். போராட்ட வெளியை களத்திலும் சட்டப் போராட்டத்தின் மூலமாகவும் சாத்தியப்படுத்தியது முன்னணி தான். பொங்கு தமிழ் மற்றும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆகிய போராட்டங்கள் முன்னணியினர் மிக நெருக்கடியான காலத்தில் போராடி பெற்ற வெற்றியின் மீது கட்டி எழுப்பப்பட்டவை. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் முன்னணிக்கு அப்போது எந்த மக்கள் பிரதிநிதித்துவமும் இருக்கவில்லை என்பது.

முன்னணி போராட்டங்களை தவிர என்ன செய்தது என எள்ளி நகையாடும் சிலர் 2009 க்குப் பின் தோல்வி மனநிலையில் இருந்து எமது சமூகத்தை அதிலிருந்து வெளியில் எடுப்பதற்கு இவ்வாறான போராட்ட வெளிகள் செய்த மற்றும் செய்து வரும் பங்களிப்புக்களை பற்றி கவனிப்பதில்லை.

முன்னணி இன்னும் எவ்வளவோ செய்யலாம் என்பது உண்மை. செய்யவில்லை என்பதும் உண்மை. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் எம் சார்பில் risk takers ஆக தலைமை தாங்க முன்வர வேண்டும். அதை முன்னணி செய்திருக்கிறது.

கஜேந்திரகுமார் அண்ணாவின் கருத்தியல் தெளிவும் கஜேந்திரன் அண்ணாவின் போராட்ட முனைப்பும் நிச்சயம் அவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு போதும்.

பார் பெமிட் வாகன பேமிட்டால் பாதிக்கப்படாத ஒரேயொரு தமிழ்த் தேசிய கட்சி முன்னணி ஒன்றே.

உங்கள் வாக்கு சைக்கிளிற்கு 🚲❌

பகிர்ந்துகொள்ள

Leave a Reply