தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இலகுநான் செந்தூரன் நேற்று (24) காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
தொண்டமானாறு கடற்கரையில் இருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இவர் காணாமல் போனமை தொடர்பாக காவல்த்துறையினருக்கு
அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல்த்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவரது உறவினர்களும் தீவிரமாக தேடினர்.
தொண்டமானாறு மயானத்திற்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பதாக தகவல் கிடைத்தை அடுத்து அங்கு சென்ற காவல்த்துறையினர் அது காணாமற்போன நபருடையது என்பதை உறுதிப்படுத்தினர்.
மோட்டார் சைக்கிளுடன் அந்த இடத்தில் மீட்கப்பட்ட அடையாள அட்டையை வைத்து அது செந்தூரனுடையது என்பதை காவல்த்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த நிலையில், இன்று (25) காலை அவரது சடலம் தொண்டமனாறு கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து தமிழ்த் தேசிய செயற்பாடுகளிலும் இவர் தன்னை அர்ப்பணிப்பாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
தமிழர்களின் விடுதலை அரசியலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தீவிரமாக பங்காற்றியவர் என முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய கொரோனா அசாதாரண சூழ்நிலையில், மக்களுக்காக நிவரண பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
அவரது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ள அதேவேளையில்
இலகுநான் செந்தூரன் அவர்களது இழப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு பேரிழப்பு என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.