- மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் செயற்படும்போதே, உள்ளக கட்டமைப்புகளையும் வெளியக கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தி, தமிழ்த் தேசத்திற்கான அரசியல் இயக்கமாக மக்களுக்கான பலவேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும்/ சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தொடர்புகளை பேணி, எமது மக்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை, அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விடயங்களை தேவைகளை அவர்களுக்கு முன்வைக்கமுடியும். சர்வதேச நாடுகளுடன் தமிழர்களது தேவைகள் நலன்கள் தொடர்பாக பேசி தீர்வு காண்பதற்கு முயல்வோம். மாறாக அவர்களின் முகவர்களாக செயற்படமாட்டோம். புலம்பெயர்ந்த மக்கள் என்பது மாபெரும் சக்தி. எமது தேசத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபா உதவிகளை செய்துவருகின்றார்கள். ஆனால் அந்த திட்டங்களை ஒருங்கிணைக்க கூடிய அவர்களது வளங்களை பயன்படுத்தக்கூடிய விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களோ நிறுவன கட்டமைப்போ ஏற்படுத்தப்படவில்லை. இதனை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக கட்சி சார்பற்ற பொதுவேலைக்கான கட்டமைப்பை, மாவட்ட ரீதியாக ஏற்படுத்தி, தேசிய ரீதியாக ஒருங்கணைக்கூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவோம்
- முஸ்லிம்கள் – மொழியால் ஒன்றித்த தனித்துவமான தேசிய இனம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக – தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் என்ற வகையில் நட்புறவான கலந்துரையாடல்களை ஆரம்பித்து உறவுநிலையை பலப்படுத்துவோம்.
- உலகப்பரப்பெங்கும் 7 கோடி தமிழர்கள் வாழ்கின்றார்கள். தமிழகம் என்பது எமது முக்கியமான பலம். அதனை சரியான முறையில் பயன்படுத்த தெரியாத தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் ஒரு சிறு சந்திப்பை கூட ஏற்படுத்தவில்லை என்பது யாரின் சாபக்கேடு? தொப்புள்கொடிகளான உறவுகளுடன் நெருக்கமான உறவை தமிழர் தேசமாக ஏற்படுத்துவோம்.
- இந்தியா, எமது தமிழக உறவுகளின் தாய்நாடு. தமிழ்த்தேசத்தினதும் தமிழகத்தினதும் நலன்களை பேணக்கூடிய பாதுகாக்ககூடிய உறவுகளை ஏற்படுத்தக்கூடிய உறவுநிலையை இந்தியாவுடன் ஏற்படுத்துவோம். தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக தமிழர் பிரச்சனைகளை முதன்மைப்படுத்துபவர்களாக பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இவற்றை முன்னகர்த்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவோம்.
- அரச வேலைத்திட்டங்கள் அபிவிருத்திகள் உதவிகள் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் அதேவேளை, எமது வளத்தில் எம்மில் தங்கி நிற்கும் தமிழர் புனர்வாழ்வுக்கான நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி, எமது மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் நீண்டகால திட்டங்கள் என்பவற்றை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை காண கட்சி சார்பற்ற பொது நிறுவன கட்டமைப்பை ஏற்படுத்துவோம்.
- அண்மைக்கால கொறானோ வைரஸ் இடர்கால நிலையின்போது, எமது மக்களுக்கு உதவுவதற்காக எமது செயற்பாட்டாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மனிதாபிமான பணியில் ஈடுபட்டார்கள். இதற்கான உதவிகளை உள்ளூரிலும் புலம்பெயர்ந்த உறவுகளிடம் பெற்றுக்கொண்டிருந்தோம். இதன் மூலம், எமது மனிதாபிமான உதவிகளுக்கான துறை ஊடாக, 50 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை செய்திருக்கின்றோம்
- எமது மக்களின் ஆதரவுடன் பலமான சக்தியாக தெரிவு செய்யப்படும்போது, தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் பொது வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்வோம். பலமான உறுதியான மக்கள் பிரதிநிதிகள் எமது அரசியல் இயக்கத்தின் சார்பில் தெரிவுசெய்யப்படும்போது கொள்கையில் உறுதியான கட்டமைப்பாக எமது அரசியல் கட்டமைப்பு நிலைநிறுத்தப்படும். அத்தகைய சூழலில், பல்வேறு கொள்கை வேறுபாடுள்ளவர்களையும் பொதுவேலைத்திட்டத்தில் இணைத்துக்கொண்டு அனைத்து தமிழ் மக்கதமிழர் தேசம் என்பது எமது நிலங்கள், எமது வளங்கள், எமது மக்கள் எமது பண்பாடு எமது தொழில்கட்டமைப்புகள் என விரிவுபட்டது. இதனை தமிழர் தேசம் என்ற தேசிய சிந்தனை கொண்ட அரசியல் இயக்கம் ஒன்றினால் பலமானதாக வளர்க்க முடியும். அத்தகைய தேசிய உணர்வை ஒருங்குபடுத்துவதே தமிழர் தேசத்தை சிதையாமல் பாதுகாக்கும்.ளுக்கான இயக்கமாக நிலைபெறுவோம்.
- தமிழர் தேசம் என்பது எமது நிலங்கள், எமது வளங்கள், எமது மக்கள் எமது பண்பாடு எமது தொழில்கட்டமைப்புகள் என விரிவுபட்டது. இதனை தமிழர் தேசம் என்ற தேசிய சிந்தனை கொண்ட அரசியல் இயக்கம் ஒன்றினால் பலமானதாக வளர்க்க முடியும். அத்தகைய தேசிய உணர்வை ஒருங்குபடுத்துவதே தமிழர் தேசத்தை சிதையாமல் பாதுகாக்கும்.
- ஒரு தேசமாக கலை பண்பாட்டு விளையாட்டு துறைகளை உருவாக்கி ஊக்கப்படுத்த வேண்டும். அவற்றின் ஆரம்ப கட்ட வேலைகளை கட்சி ரீதியாக வளர்த்துவருகின்றோம். ஆனால் ஒரு தேசகட்டமைப்பாக – வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த – தமிழ் மொழிபேசும் மக்களால் இணைந்த தேசத்திற்கான கட்டமைப்பாக வளர்க்க எமக்கான அங்கீகாரம் மக்களால் வழங்கப்படவேண்டும்.
எமது மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை, ஆவணப்படுத்துவதிலும் சர்வதேச நிறுவனங்களுக்கு அதனை கையளிப்பதிலும் கட்சி ரீதியாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். இனவழிப்புக்கு போதிய ஆதாரம் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறிவரும் நிலையில், ஆரம்பம் தொட்டு இதற்கான வேலைகளை செய்து வருகின்றோம். இன்று உலகமெங்கும் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் தொடர்பான அங்கீகாரம் மெல்ல மெல்ல மேலெழுந்துவருகின்றது. இனவழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்வதன் நீட்சியே தமிழர்களுக்கான விடிவிற்கும் வழியை கொண்டுவரும் என்ற நோக்குநிலையில் எமது செயற்பாடுகள் விரிவுபடுத்தப்படும் இரண்டு இலட்சம் மக்களையும் ஐம்பதினாயிரம் மாவீரர்களையும் இழந்த நிலையில் மறுக்கப்பட்ட நீதிக்காக சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்தி தீர்வு காணவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னே, கூட்டமைப்பின் தவறான பாதையை சுட்டிக்காட்டியும் வெளிப்படுத்தியும், எந்த அதிகாரமும் அங்கீகாரமுமின்றி இழந்துபோன மக்களினதும் மாவீரர்களினதும் தியாகங்கள் வீணாககூடாது என்ற நோக்கில் செயற்பட்டுவந்தவர்கள் யார் என்பதையும் சிந்திக்க கோருகின்றோம்.