தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!

You are currently viewing தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை வாக்குச்சாவடி அலுவலர்கள் மாதிரி வாக்குப் பதிவு செய்து காட்டி, இயந்திரங்களை சோதித்ததைத் தொடர்ந்து வாக்குப் பதிவு முறைப்படி தொடங்கப்பட்டது.

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வாக்குச்சாவடிகளில் கையுறைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கையுறைகளைப் போட்டுக்கொண்டே அனைவரும் வாக்களிக்க முடியும்.

அத்துடன், வாக்களிக்க வருவோர் முகக் கவசம் அணிவதும், ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள் நுழைய முன்னர் வாக்காளர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 , 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 3 கோடியே 9 இலட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண்கள்; 3 கோடியே 19 இலட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண்களாவர். 7,192 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

88 ஆயிரத்து 937 வாக்களிக்கும் மையங்களில் வாக்களிப்பு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்காக இம்முறை 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குபதிவு ஆரம்பமான நிலையில் தமிழகம், புதுச்சசேரி மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

தமிழக துணை முதலமைச்சா் ஒ. பன்னீா்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், நடிகர் ரஜனிகாந், நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

பகிர்ந்துகொள்ள