தமிழ்மக்களின் தனிப்பெரும்பான்மையை சிதறடிக்க மாற்றமெனும் மாயை அரசியல்!!

You are currently viewing தமிழ்மக்களின் தனிப்பெரும்பான்மையை சிதறடிக்க மாற்றமெனும் மாயை அரசியல்!!

கயேந்திரகுமார் நினைத்திருந்தால் 2009 இற்கு பிற்பாடு தனது வியாபாரத்தை கவனித்துக்கொண்டு இருந்திருக்கலாம் இந்த சகதி அரசியலை தூய்மைப்படுத்தவேண்டும் என்று நினைத்திருக்க தேவையில்லை

ஏனெனில் 2009 இற்கு முற்பாடு எங்கள் தலைவர் பிரபாகரன் நலிந்து இனி கிடக்கமாட்டோம் நாமெல்லாம் உயர்ந்து நிற்போமென கோசமிட்டவர் 2009 இற்கு பிற்பாடு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

அதற்கு மேலும் சென்று தேசியத்தலைவரை தூற்றித்திரிகின்ற பைத்தியங்களையும் பார்த்து வரும் நிலையில்

தேசியத்தலைவர் ஒப்படைத்த விட்டுக்கொடுக்காத அரசியலை இறுகப்பிடித்தபடி அவர் மீது ஆழமான மதிப்பு வைத்து ஆயிரம் ஆயிரமாய் அணையாத விளக்குகளாய் மண்ணுறங்கும் மாவீரர்களின் எண்ணங்களை மனங்களில் சுமந்து இற்றைவரை விட்டுக்கொடுக்காத அரசியலை முன்னெடுத்து வரும் திருமிகு கயேந்திரகுமார் தலைமியிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்தினால் மட்டுமே அரசியல் அநாதைகள் ஆக்கப்படாமல் புலமும் நிலமும் சேர்ந்து தமிழ் மக்களுக்கான ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கமுடியும்.

இந்த நிலை உருவாகிவிடக்கூடாது என்றுதான் இன்று பலநூறு சுயேட்சைக்குழுக்களை களமிறக்கி மாற்றமென்ற மாயை அரசியலுக்குள் மக்களை உள்ளிழுத்து தமிழ்மக்களின் தனிப்பெரும்பான்மையை சிதறடித்து பேரம் பேசமுடியாத இனமாக மாற்றுவதற்கு எங்களை அழித்த சக்திகளும் அதன் ஒட்டுண்ணிகளும் ஒட்டுக்கேட்டு வந்துள்ளார்கள்.

ஆகவே தமிழ்த்தேசியத்தை கருவறுக்க வந்திருக்கும் இந்த கறுப்பாடுகளை மக்கள் புறந்தள்ளி உரிமை அரசியலுக்காக உயர்ந்து நிற்கும் கரங்களை பலப்படுத்துவோம்.

நாளைய சந்ததியேனும் நிம்மதியாக வாழ வேண்டும்!” என நினைத்து விதையுண்டவர் கனவுகளை உயிரில் சுமந்து பயணிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் சைக்கிள் சின்ன அணிக்கு உங்கள் வாக்குகளை பொறுப்போடு வழங்குங்கள் தாயக உறவுகளே!

மக்கள் சக்தியின் மகத்தான வாக்குகளை வீணடிக்கும் சூழ்ச்சிகளைச் செய்யும் அனைத்து சக்திகளையும் முறியடித்துப் பொன்னான உங்கள் வாக்குகளை மண்ணாக்காமல் மண்ணுக்காக உழைக்கும் முன்னணி அணியினர்க்கு வழங்குங்கள் உறவுகளே!

பகிர்ந்துகொள்ள

Leave a Reply