தமிழனக்கென்றோர் நாடில்லை
தரணியல் தமிழனில்லா ஊரில்லை
ஆனால்?
தமிழனக்கென்றோர் நாட்காட்டியுண்டு
அதில்
தமிழனெக்கென்றோர் புத்தாண்டு உண்டு
அது
சித்திரை அல்ல தை முதல் நாள்!
தமிழ் அறிஞர்கள் விளித்துரைத்த
தைத் திங்களின் முதலாம் நாள்!
இந்த புத்தம் புது நாளில்
புது நெல் வாசனை மூக்கை துளைக்கும் வேளையில்
சூரியனுக்கு நன்றி சொல்லும்
நன்றி மறப்பது நன்றன்று என்பதை
மெய்ப்பிக்கும் நாளில்
எட்டுத்திக்கும் காற்றலையிலும்
காணொளி வலையொளியிலும்
தமிழ்த்தேசியத்தின் பணியினை
முன்னெடுக்கும் தமிழ்முரசம் வானொலி
தித்திப்பாய் பொங்கல் மிளிர
உறவுகளுக்கு இனிய வாழ்துகளை
தெரிவித்துக்கொள்கின்றது.