அனைவருக்கும் வணக்கம்
தமிழ்முரசத்தின் 28வது ஆண்டு பொன்மாலைப்பொழுதில் மேலும் தமிழை கொண்டாடும் நிகழ்வாக “தமிழே எங்கள் மூச்சு” பேச்சுப்போட்டி இம்முறை முதல் முறையாக தமிழ்முரசத்தால் நடாத்தப்படவுள்ளது. எமது சிறார்களின் பேச்சுத்திறனை வளர்க்கவும் அவர்களுக்குள் இருக்கும் தமிழ் ஆளுமையை வெளிக்கொண்டுவரவும் எமது வரலாறுகளை அவர்களுக்கு கடத்தவும் இப்போட்டியானது நிச்சயமாக புடம் போட்டுக் காட்டி நிற்குமென நம்புகின்றோம்.
அந்த வகையில் இப்போட்டியானது இரண்டு பிரிவுகளாக(6-11,12-18) நடைபெறுகின்றது. இப்போட்டியில் பங்கெடுப்பவர்களுக்கு பேச்சுப்பயிற்சி எம்மால் வழங்கப்படுவதோடு ஆண்டு விழா அரங்கில் மதிப்பளிக்கப்படுவார்கள்.
அதேவேளை முலாவது இடத்தை பெறுபவர் எமது ஆண்டு விழாவில் பேசும் வாய்பைப்பெறுவார் என்பதையும் மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
அத்தோடு அனைவருடைய பேச்சுக்களும் பதிவு செய்யப்பட்டு வானொலியில் ஒலிபரப்பி சிறப்பிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நீங்கள் செய்யவேண்டியது குறித்த விண்ணப்பமுடிவுத்திகதிக்குள் 3 நிமிடங்களுக்கு கூடாது பேச்சுக்காக எழுதியதையும்,( எழுத உதவி தேவையெனில் தொடர்புகொள்ளலாம்) பெயரையும், தொலைபேசி இலக்கத்தையும், எமக்கு அனுப்பிவைக்கவேண்டும் பின்பு நேரடித்தெரிவுக்கான திகதி எம்மால் அறியத்தரப்படும்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
tamilmurasam@gmail.com
மேலதிக தொடர்புகளுக்கு தொலைபேசி இல: 97192314