தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து பணியாற்றவும் தயார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் அரசுக் கட்சியின் தலமைத்துவம் தந்தை செல்வாவின் கொள்கையுடன் பயணிக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேசுவதற்கும் இணைந்து செயலாற்றவும் நாம் தயார்.
தமிழ் அரசுக் கட்சியை நாம் ஒரு போதும் அழிக்க நினைத்ததில்லை.
குறிப்பாக தமிழரசுக்கட்சியை பொருத்தவரை தலைவர் செயலாளர் பதவிகள் கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால் நாடாளுமன்ற குழு தலைவர் பதவி மாத்திரம் உறுதியான ஒன்றாக காணப்படுகின்றது.
மேலும், தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமைப்பற்றி தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரனுடன் பேசும் போது அதற்கான தீர்வை பெறமுடியும் என்ற நம்பிக்கை வெளிப்படவில்லை.
குறிப்பாக தமிழ் தேசியத்தில் இருந்துக்கொண்டு அதனை எதிர்க்கும் பலர் இந்த மண்ணில் உள்ளனர்.
இதன் காரணமாகவே தமிழ் தேசிய கட்சிகள் அணைத்தையும் ஒன்று சேர்க்கும் பொது நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.