ஜூன் 13ஆம் திகதி குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக நீதிமன்ற தடை உத்தரவை மீறி இரகசியமாக பௌத்த கோயிலை கட்டுவதற்காக காட்டுமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அங்குள்ள மக்களுக்கு தகவல் கிடைத்து அங்குள்ள மக்கள் அரசியல் பிரமுகர்களும்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது பொதுச் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வராஜா கஜேந்திரன் உட்பட அங்கு சென்று அந்த சட்டவிரோதச் செயற்பாடுகளை இராணுவமும் புத்த பிக்குகள் என்ற பெயரில் போர்வைகளில் வந்துள்ள நபர்களும் சேர்ந்து நடத்தவிருந்த காரியத்தை முறியடித்து எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தி இருந்தார்கள். தமிழ் மக்களுடைய கலாச்சார பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு அதை பாதுகாப்போம் என்ற உணர்வோடு செயற்படுகின்ற பொதுமக்கள் மட்டத்திலே திரு மாதவன் மேஜர் அவர்கள் முன்னாள் போராளியின் அவருடைய குடும்பத்தில் மூன்று மாவீரர்கள் அவருடைய தகப்பன் ஒரு நாற்றுப்பற்றாளர்.
பௌத்த மயமாக்கல் தமிழ் இன அழிப்பின் ஒரு கட்டமாக நடத்தப்படுகின்ற இந்த செயற்பாடுகளை முறியடித்த அதற்குப் பிற்பாடு, அதாவது 13 ஆம் தேதி இந்த செயற்பாடுகள் முறியடித பின்னர் 15ஆம் திகதி அதிகாலை 1.30 மணி அளவில் மாதவன் மேஜர் அவர்கள் தன்னுடைய தோட்ட வேலைகளை முடித்து வீடு வீடு திரும்பி தனது வீட்டு கதவினை திறந்த வெளியில் இரண்டு நபர்கள் அவருடைய தலையிலேயே துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி இருக்கின்றார்கள்