தியாகதீபம் திலீபன் பன்னிருநாள் நீராகாரம் இன்றி உண்ணாநிலைப்போராட்டத்தினை மேற்கொண்டு இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கையை முன்வைத்தபோது பதிலளிக்காது பார்த்தீபனை பசியோடு தவிக்கவிட்டபோது தணியாத தாகத்திற்காய் விடுதலையின் வித்தாகிப்போன அறத்தின் முதற் பிள்ளையின் வரலாற்றினை அடுத்த சந்ததிகளுக்கு கடத்தும் நோக்கோடு அன்னைபூபதி தமிழ் பாடசாலைகளில் தமிழ் இளையோர் அமைப்பினால் நினைவுக்கண்காட்சியும் விளிப்பூட்டல் நிகழ்வும் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.