தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் பிணையில் விடுதலை!

You are currently viewing தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் பிணையில் விடுதலை!

தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று(29) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ்.அன்வர் சதாத் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து ,ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் செல்ல உத்தரவிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply