காலனித்துவ ஆட்சியில் 108 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறையை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும் அரசு காட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
காலனித்துவ ஆட்சியில் 108 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது இதனை நாம் வரவேற்கிறோம்.ஹென்ரி பேதிரிஸ் படுகொலை செய்யப்பட்டமை மிலேட்சத்தனமானது.
அதேவேளை சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க,ரிச்சட் சொய்ஸா,முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,ரவிராஜ்,மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ்,பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை ,உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்படடோர் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறையை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் அரசு காட்ட வேண்டும் என்றார்.