தமிழ் தேசிய பேரவையின் மே1 நாள் எழுச்சிக் கூட்டம் நெல்லியடி மாலு சந்தியில் சிறப்பாக முன்னெடுப்பு..!
தமிழ் தேசிய பேரவையின் மே தின எழுச்சி கூட்டம் இன்று மாலை 6:30 மணியளவில் நெல்லியடி மாலுசந்தியில் அமைந்துள்ள மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய இருபிள்ளைகளை மாவீரராக இனத்திற்கு வழங்கிய தாயாரால் பொது சுடரேற்றபட்டது . தொடர்ந்து மங்கல விளக்கேற்றி மே தின எழுச்சி கூட்டம் ஆரம்பமானது .
இதன் பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வா ராசா கஜேந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் , திரு அருந்தவபாலன்,எம் .கே. சிவாஜிலிங்கம்,கரவெட்டி பிரதேசத்தின் தமிழு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.