தமிழ் மக்களின் வாக்குகளை பெற ஏமாற்றும் சிறீலங்கா சனாதிபதி!!

You are currently viewing தமிழ் மக்களின் வாக்குகளை பெற  ஏமாற்றும் சிறீலங்கா சனாதிபதி!!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியுமே இவ்வாறு தீடீரென அகற்றப்பட்டது.

அங்கு எவரும் கடமையில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் தமிழ் மக்களுக்கு சிறீலங்கா சனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மாறாக சிங்கள தேசியத்தை பாதுகாக்கவே பாடுபடுகின்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply