வலி சுமந்த மாதத்தின் 05 ம் நாள்
தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் எனும் பொய்யான தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவே வன்னியில் மக்கள் மீது மனிதாபிமானமற்ற பொருளாதார தடையை ஏற்படுத்தி பட்டினி சாவுக்கு தள்ளிக்கொண்டிருந்ததுடன் உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதே மக்களின் நிலைப்பாடு என மருத்துவமனை வட்டாரங்கள் அன்று தெரிவித்தன.
2009 மே 5 நாள் மருத்துவமனை ஊழியர்களிடம் உள்ள சாதாரண உணவுகள் ஒரு நாளைகே போதுமானதாக இல்லையெனவும் இனி கொழும்பிலிருந்து உணவுகள் எதுவும் வருவதற்கான சாத்தியமே இல்லையென்பதுடன் மனிதாபிமானம் என்பது அறிக்கைகளில் மட்டுமே இருப்பதாகவும் ஐ.நா வின் மனிதாபிமான செயற்பாட்டு தலைவர் ஜான் ஹோம்ஸ் UN humanitarian chief, John Holmes தெரிவித்தார்
பேரினவாத சிறிலங்கா அரசாங்கம் கனரக பீரங்கிகள் கொண்டு தன் சொந்த குடிமக்களை சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி மிலேச்சத்தனமாக தாக்கும் போது உலகமும் வேடிக்கை பார்ப்பதுடன் ஐ.நா போன்ற தொண்டு நிறுவனங்கள் நம்பிக்கை இழப்பதுடன் அந்த நம்பிக்கை ஒரு நாளும் ஈடு செய்ய முடியாத நிலைக்கு செல்வதாக பெயர் சொல்ல முடியாத ஒரு அரசியல் வர்ணனையாளர் அன்றைய காலத்தில் தெரிவித்திருந்தார்
தமிழ் மக்களுக்கு போதுமான உணவுப் பொருட்களை அனுப்பக்கூடாது என்பதற்காக இனப்படுகொலையாளி மகிந்த அரசாங்கம் வன்னியில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரத்திற்கும் உட்பட்ட மக்களே இருப்பதாக தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் இந்தியா வன்னி மக்களிற்கு வழங்கிய உதவி எண்ணிக்கையையும் தங்களது புள்ளி விபரங்களையும் காட்டியிருந்தது. ஆனாலும் அன்றைய காலத்தில் இயங்கிய சில புலனாய்வு ஊடகங்களில் 150000 மேற்பட்ட மக்கள் அங்கிருப்பதாக தெரிவத்திருந்தன.