தமிழ் மக்கள் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும்?

You are currently viewing தமிழ் மக்கள் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும்?

தமிழ் மக்கள் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பலப்படுத்த வேண்டும்?

தமிழ் மக்கள் கௌரவத்துடன், தன்மானத்துடன், சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய ஓரே கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்படக்கூடியவர்களைக் அடித்தளமாகக் கொண்ட கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே.

நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, தூர நோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்த காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்டவர்களையுடைய கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களை தன்னகத்தே கொண்ட கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

தமிழர்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பு, அதற்கு சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்கும் என்பதை அயராது எடுத்துச் சொல்லிவரும் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டம் முன்வைக்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

பூகோள அரசியலை ஆழமாக அறிந்தவரும், சர்வதேச சமூகத்துக்கு நன்கு பரிச்சயமானவருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தலைவராகக் கொண்ட கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

படையினரால் மேற்கொள்ளப்படும் சகல அட்டூழியங்களுக்கெதிராகவும் துணிவுடன் தாயகத்தில் இருந்து கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணியே.

மகிந்தவின் ராஜபக்சவின் கொடூர ஆட்சியில் திறந்தவெளிச் சிறைச்சாலையாக தமிழர் தாயகம் இருந்த போது, வவுனியா சிறைக்குள் வைத்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி உட்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலையும் நீதியும் வேண்டி மக்களை அணிதிரட்டி முதன்முதலாக போராட்டத்தை முன்னெடுத்த கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே.

தமிழர் தேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு சார் இனஅழிப்பின் அங்கமான நில அபகரிப்புக்கும் இராணு ஆக்கிரமிப்புக்கும் எதிராக மக்களை அணிதிரட்டி முதன் முதலாக தனித்து குரல் கொடுத்த கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.19 யூலை 2012 நெல்லியடியில் இந்த மக்கள் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

சிறிலங்கா மீதான ஐக்கியநாடுகள் தீர்மானங்கள் பலவீனமாக்கப்பட முயற்சிகள் நடந்தபோது அதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்பிய ஒரே கட்சி தமிழ் தேசிய மக்கள் முனணியே. அத்தீர்மானத்தை ஓரளவாவது வலுப்படுத்தப்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து மேற்கொண்ட அழுத்தமே காரணம்.

ஐநா உட்பட்ட சர்வதேச அரங்குகளில் வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காக எமது மக்களின் வாழ்வை விலைபேசாது, தமது தெளிவான தொலைநோக்கான இராசதந்திர செயற்பாடுகள் மூலம் எமது மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிற கட்சி. உதாரணமாக தமிழர் பிரதேசத்தில் சிறீலங்கா படைகள் குறைக்கப்படவேண்டும் போன்ற அழுத்தங்கள் நீக்கப்பட்ட போது, அதற்கு எதிராக குரல் கொடுத்த ஒரே ஒரு தாயக தரப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியே.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழுத்தமே ஐநா விசாரணையின் விடயப்பரப்பு ஓரளவாவது அதிகரித்தமைக்கு காரணம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரே , தாயகத்திலிருந்து ஐ.நா விசாரணைக்கு சாட்சியங்களை திரட்டிக்கொடுத்த தமிழ்தரப்பு.

சிங்கள தேசம் எதனைத் தரும் என்பதை வைத்துக் கொண்டு நாம் எமது நிலைப்பாட்டை நாம் தீர்மானிக்க முடியாது. நாம் எதிர்கொள்ளும் பிரச்சனை தமிழ் தேச அழிப்பு. அதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் எமது தேசம் என்ற அடையாளம் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கட்சி.

தமிழர்களின் அரசியல், சர்வதேச சக்திகளால் தமது நலனை முன்னெடுக்க உபயோகிக்கப்படுகின்றது. எமது தேவை தொடர்பில் நாம் திடமாக நிலைப்பாடு எடுத்து சர்வதேச அரசியலை சரியாகக் கையாண்டால் எமக்குரிய தீர்வை பெற முடியும். இதற்காக தாயகத்திலும், புலத்திலும், தமிழகத்திலும் நாம் சனநாயக சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். இந்த கருத்தியல் ஒற்றுமையாலும் சர்வதேசத்தை சரியாக கையாள்வதாலும் நாம் எமது இலக்கை அடைந்து கொள்ளலாம் என்ற ஆழமானதும், தெளிவானதும் தூரநோக்குப் பார்வையும் கொண்ட ஒரேகட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே.

இலங்கைத்தீவில் நிகழும் இனப்பிரச்சினையானது, வெறும் அதிகாரங்களை பகிர்வதற்கான பிரச்சினையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருதவில்லை. தமிழ் இனத்தின் மொழியை, பண்பாட்டை, பொருளாதரத்தை அழித்து அதன்மூலம் எமது இனத்துவ அடையாளத்தினை அழிக்கும் ஒரு கூட்டு முயற்சியாகவே இப்ப்பிரச்சினையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பார்க்கிறது. இதனையே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பம் தொட்டு, இது ஒரு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு செயன்முறை என கூறி இன அழிப்பை நிரூபிக்க போராடி வருகிறது.

எமக்கு இழைக்கப்பட்டது இன அழிப்பே என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதியாக இருக்கிறது, இதை உள்நாட்டு அரங்குகளிலும் சர்வதேச அரங்குகளிலும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துவதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பங்கு முக்கியமானது.

ஆக, இந்த இன அடையாளத்தின், தமிழ் தேசத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியிலிருந்து ஈழத்தமிழர்களை பாதுக்காக தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய தீர்வு தமிழ்த் தேசத்தின் அங்கீகராமே, தவிர அதிகாரங்களின் பகிர்வு அல்ல என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதியாகவுள்ளது.

தேசத்தின் அங்கீகாரம் எனப்படுவது பிரிவினை அல்ல. தேசம் என்பது தனியான நாடு என்பதும் அல்ல. இலங்கைத்தீவில் இரு தேசங்கள் இருக்கவேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை.

இது உலகில் நடைமுறையில் உள்ள சாதாரண ஒரு விடயம் தான்.

இதற்கு சிறந்த உதாரணம், கனடா. இரண்டு தேசம் ஒரு நாடு. சுவிஸ் நான்கு தேசம் ஒரு நாடு போன்ற நாடுகளில் உள்ள அரசியல் முறைமகள் ஆகும்.

இதை அடைவதற்கான வழிமுறைகள் சிலவற்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2015 பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

அதில் முக்கியமானது மக்களை அரசியல் மயப்படுதலும், பூகோள அரசியலில் இலங்கைத்தீவினதும், குறிப்பாக , தமிழர்களினது முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை தமிழ மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய பேரம் பேசும் சக்தியாக பயன்படுத்தல்.

வெறுமனே அதிகாரங்களை பகிர்வதன் மூலம், இந்த பிரசினையை தீர்க்கலாம் என கருதுவது , இப்பிரச்சினையின் பரிமாணத்தை மலினப்படுத்துவது ஆகும்.

ஈழத்தமிழர்களின் இறுதி அரசியல் இலக்கு அடையும் வரைக்கும் எமது மக்களின் அன்றாட தேவைகளையும் போர்ப்பாதிப்பிலிருந்து மீள்எழுதலுக்கான நடவடிக்கைகளையும் தமிழர்கள் தாமதிக்க முடியாது.

இதற்காக, எமது மண்ணில் ஒரு இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைத்து ஈழத்தமிழர்களின் நலன் பேணும் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விரும்புகிறது.

அதற்கான கால நீட்சி அதிகமாக காணுமிடத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எம் மண்ணினதும் புலம்பெயர்ந்த எமது துறைசார் நிபுணர்களின் உதவியுடனும் புலம்பெயர் மக்களின் வளப்பங்களிப்புடனும், ஒரு சமாந்தர கட்டமைப்பு ஒன்றை நிறுவி அதனூடு எமது மக்களின் பிரசினைகளை கவனத்திற்கொள்ளும் திட்டமுண்டு.

ஏற்கனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பண்பாட்டுப் பிரிவு, கல்விப் பிரிவு, , விளையாட்டு பிரிவு, பெண்கள் அபிவிருத்திப் பிரிவு , சூழல் பாதுகாப்பு பிரிவு என்பவற்றை நிறுவி, அதனூடு பல செயற்றிட்டங்க்ளை வடக்கு கிழக்கெங்கும் மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய பிரிவுகள், தமிழர் பண்பாட்டை பலப்படுத்துவதோடு பண்பாட்டு சீரழிவுகளையும் கட்டுப்படுத்துகிறது. முக்கியமாக, கட்டமைப்புசார் இனஅழிப்பின் அங்கமாக, எமது இளைய சமுதாயத்தின் போராட்ட மனோநிலையையும் தேசம் தொடர்பான சிந்திப்பையும் சீரழிக்கும் நோக்கோடு போதைவஸ்து, மதுபானப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பாவனை போன்ற விடயங்கள் திட்டமிட்டு எமது மண்ணில் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதனை முறியடித்து எமது தேசத்தை பாதுகாப்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பண்பாட்டுப் பிரிவு, கல்விப் பிரிவு, , விளையாட்டு பிரிவு போன்றன கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. இது மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்படும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply