ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தற்போது தர்பார் பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 75 விழுக்காடு திரையரங்க உரிமையாளர்கள் தர்பார் படத்தை இன்னும் வாங்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தர்பார் பட நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்வதால் இழுபறி ஏற்பட்டு உள்ளது. நுழைவுச்சீட்டு விலையில் அதிகளவில் விநியோகஸ்தர்கள் பங்கு கேட்பதால் இழுபறி ஏற்பட்டு உள்ளது.
கபாலி பட வெளியீட்டின் போது இதேபோல் பிரச்சினை உருவானது குறிப்பிடத்தக்கது.
தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் லைகா நிறுவனம் தற்போது 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்யும் வரை தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடலாம் எனவும் சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.