தற்காலிக அவசர சட்டங்களை அமுல்படுத்தும் நோர்வே! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing தற்காலிக அவசர சட்டங்களை அமுல்படுத்தும் நோர்வே! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலின் எதிர்விளைவுகள் காரணமாக, அவசர நிலைகளில் முடிவுகளை எடுக்கும் வழிவகைகளை இலகுவாக்கும் நோக்கோடு, தற்காலிக, அவசர சட்டமூலங்களை அமுல்படுத்தப்போவதாக நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்கெனவே நடைமுறையிலிருக்கும் அடிப்படை சட்டவிதிகள் இடைநிறுத்தி வைக்கப்படுமெனவும், குறைந்தது ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வண்ணம் அமுல்படுத்தப்படும் தற்காலிக அவசர சட்டங்கள், 31.12.2020 உடன் நிறைவுக்கு வந்து, மீண்டும் வழமையான அடிப்படைச்சட்டங்கள் பயன்பாட்டுக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போதுள்ள அவசர நிலைமைகளில், அவசரமான முடிவுகளை எடுப்பதற்கு இலகுவாகவிருக்கும் என்பதாலேயே, இந்நடைமுடை தொடர்பில் தாம் ஆலோசித்துள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்காலிகமாக அமுலுக்கு வரும் புதிய அவசர சட்டவிதிகள், எல்லைமீறுவதாக நாடாளுமன்றம் கருதினால், அவசர விதிகள் அவ்வப்போது நாடாளுமன்றத்தினால் தடுக்கப்படலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள