தற்காலிக வேலைநீக்கம் பெற்றவர்கள் தொடர்ந்தும் வேலையில்! எச்சரிக்கும் நோர்வே சமூகநல கொடுப்பனவு மையம்!!

You are currently viewing தற்காலிக வேலைநீக்கம் பெற்றவர்கள் தொடர்ந்தும் வேலையில்! எச்சரிக்கும் நோர்வே சமூகநல கொடுப்பனவு மையம்!!

“கொரோனா” பரவலினால் நோர்வே முடங்கியதன் எதிர்வினையாக, தற்காலிகமாக வேலையிழந்தவர்கள், தம்மை வேலையிழந்தவர்களாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கான தற்காலிக சமூகநல கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், அவர்கள் தொடர்ந்தும் வேலைகளில் தொடரும் பட்சத்தில் அவர்கள் தண்டனைக்களுக்காளாக நேரிடுமென நோர்வேயின் சமூகநலக்கொடுப்பனவு மையம் (NAV / Ny Arbeids og Velfredsetaten) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நோர்வேயின் பிரபல நாளேடான “Atenposten” பத்திரிகையின் கணக்கெடுப்பின்படி, வேலை வழங்குநர்களால் தற்காலிகமாக வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை வழங்குநர்களால் தொடர்ந்தும் சிற்சில வேலைகளை பார்க்கும்படி பணிக்கப்படுவதாகவும், வேலையின்மைக்கான சமூகநலக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், வேலை வழங்குனரின் பணிப்புரையை ஏற்று அவர்கள் வேலைகளை செய்தும் வருவதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் சமூகநலக்கொடுப்பனவு மையத்தின் இயக்குனரான “Ole Johan Heir” தெரிவிக்கையில், மேற்படி வேலையின்மைக்கான சமூகநலக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் அதேவேளை, வேலை வழங்குநருக்காக வேலை பார்ப்பது சட்டமுரணானதெனவும், தண்டனைக்குரியதெனவும் குறிப்பிட்டுள்ளதோடு, வேலையின்மைக்காக இதுவரை பெற்றுக்கொண்ட சமூகநலக்கொடுப்பனவுகளை திருப்பிச்செலுத்தும் நிலையும் ஏற்படுமெனவும் சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்துள்ளார்.

தற்காலிக வேலைநீக்கம் பெற்றவர்கள் தொடர்ந்தும் வேலையில்! எச்சரிக்கும் நோர்வே சமூகநல கொடுப்பனவு மையம்!! 1

வேலையின்மைக்கான சமூகநலகொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு அதேவேளையில், வேலை வழங்குநருக்காக முழுநேரமாகவோ, பகுதிநேரமாகவோ அல்லது தன்னார்வமுறையிலோ வேலைபார்ப்பவர்களுக்கான வேலைக்கான கொடுப்பனவுகளை அந்தந்த வேலை வழங்குநர்களே வழங்கவேண்டுமெனவும், அதேநேரத்தில், இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்களும் தமக்கு அறியத்தர வேண்டுமெனவும் சமூகநலக்கொடுப்பனவு மையம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள