பின்லாந்தின் தலைநகரம் “ஹெல்ஸிங்கி / Helsinki” எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“கொரோனா” பரவலை தடுப்பதற்காக, தலைநகர் “Helsinki” மற்றும் தலைநகர் அமைந்துள்ள பகுதியான “Nyland” மாகாணத்துக்கான அனைத்து போக்குவரத்துக்களும் தடை செய்யப்படுவதாகவும், வெளியிலிருந்தோ அல்லது தடைசெய்யப்படும் பகுதிகளிலிருந்து வெளியேயோ எவ்விதமான போக்குவரத்துக்களும் இருக்காதெனவும், மக்களின் நடமாட்டங்களும் கட்டுப்படுத்தப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் பின்லாந்தில் இதுவரை, 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 3 பேர் மரணமாகியுள்ளனர்.