
சற்று முன் தலைமன்னாரில் பேருந்துடன் புகையிரதம் மோதி விபத்து
தலைமன்னாரில் பேருந்துடன் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்களே அதிகம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.