தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்த பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு!!

You are currently viewing தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்த பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு!!

தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 இற்கு இடைப்பட்ட கடற்பகுதியில் சிறீலங்கா கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சுமார் 124 கிலோ 392 கிராம் ஈரமான எடையுடன் குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்தநிலையில்,  கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply