உக்ரைன் மீது ரஷியா 132-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, லூகன்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரையும் ரஷியா கைப்பற்றியது. இந்நிலையில், டான்பாஸ் மாகாணத்தில் தாக்குதலை தீவிரப்படுத்த படையினருக்கு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
டோனெட்ஸ்க் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தவும் படையினருக்கு ரஷியா உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக உக்ரைன் – ரஷிய படையினருக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.