மன்னார் – இலுப்பைக்கடவை பிரதேச மாவீரர் பெற்றோருக்கான மதிப்பளிப்பு 24.11.2024 மாலை 4.00 மணிக்கு கொட்டும்மழைக்கு மத்தியில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டமைக்கிணங்க மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், உறவுகள் என 70 க்கு மேற்பட்டோர் வருகைதந்திருந்தனர். பொதுச்சுடரேற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.மாவீரர்களின் நினைவு சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது. பின் தேனீர், சிற்றுண்டி வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக உலருணவு, பழமரக்கன்று வழங்கிவைக்கப்பட்டது.நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் பெற்றோருக்கான மதிப்பளிப்பு 25 .11.2024 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. பொதுச்சுடரேற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.மாவீரர்களின் நினைவு சுமந்து உரை நிகழ்த்தப்பட்டது. பின் தேனீர், சிற்றுண்டி வழங்கி வைக்கப்பட்டது. இறுதியாக உலருணவு, பழமரக்கன்று வழங்கிவைக்கப்பட்டது.நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர்- ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு.
திருகோணமலை சாம்பல்தீவு
சல்லி, நிலவெளி, செல்வநாயகபுரம், வரோதாயநகர், கும்புருப்பிட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெற்றோர் 100 பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டனர்
மாவீரர்கள் நினைவாக மரகன்றும், உலர்உணவு பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.